அந்தப் படத்தை ஓட விட்டால் கூட அதிகப்பட்சம் ஒரு வாரம் ஓடி, பிறகு அப்படியே சமத்துப் பிள்ளையாக பிரிண்டுகள் எல்லாமே ஏஜி.எஸ் கம்பெனிக்கு ரிட்டன் ஆகியிருக்கும்.
ஆனால் எதிர்க்கிறேன் பேர்வழி கூடுதலாக சில நாட்கள் ஓட வைக்கும் நிகழ்வுக்கு ஆளாகியிருக்கிறது ஜெய்யின் ‘நவீன சரஸ்வதி சபதம்’ திரைப்படம்.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ரிலீசான இந்தப்படம் இந்து கடவுள்களை காமெடி கதாபாத்திரங்களாக சித்தரித்திருப்பதாக பரவலான புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் பாரத் மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அண்ணாத்துரை கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் சமீபத்தில் வெளியான நவீன சரஸ்வதி சபதம் என்ற படத்தில் இந்து கடவுள்களான சிவன், பார்வதி, முருகன், விநாயகர், சரஸ்வதி ஆகியோரை இழிவுபடுத்தும் விதமாக காட்சிகள் உள்ளது.
மேலும் இந்து கடவுள்கள், குத்தாட்டம் ஆடுவது போன்றும், குடி, மற்றும் ஆபாச காட்சிகளை கம்ப்யூட்டரில் பார்ப்பது போன்றும் காட்சிகள் உள்ளது. இது இந்துக்கள் மனதை புண்படுத்துகிறது.
எனவே படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர், நடிகைகள் படத்துக்கு அனுமதி அளித்த தணிக்கை குழுவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். படத்தில் குறிப்பிட்ட காட்சிகளை நீக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறுப்பட்டுள்ளது.
இதெப்படியிருக்கு?
















