அவசரப்பட்டா… இப்படித்தான் ரிசல்ட் வரும் : செல்வராகவனை காய்ச்சி எடுத்த ஹாரிஸ் ஜெயராஜ்!

harris-jayarajபழகிய வேகத்திலேயே அவர்களுடன் ப்ரெண்ஷிப்பை கட் பண்ணிக் கொண்டு வந்தவர் டைரக்டர் செல்வராகவன்.

கேமராமேன் அரவிந்த் கிருஷ்ணா, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ்குமார் என நீண்டு கொண்டே வரும் இந்தப் பட்டியலில் லேட்டஸ்ட்டாக சேர்ந்தவர் தான் ஹாரிஸ் ஜெயராஜ்.

தம்பி தனுஷை மட்டும் தான் செல்வா கட் பண்ணி விடவில்லை. மற்றபடி டீப்பாக இருந்த எல்லோருமே இப்போது செல்வா பக்கத்தில் இல்லை.

குறிப்பாக யுவனுடன் கூட்டணி போட்ட போது செல்வா மிகப்பெரிய இயக்குநராக ரசிகர்களால் ஆராதிக்கப்பட்டார். இப்போதும் அவர் மீது அதே எதிர்பார்ப்பு இருந்தாலும் சமீபகால தோல்விகள் ரசிகர்கள் மத்தியில் பலத்தை சந்தேகத்தை எழுப்பியுள்ளன.

அதிலும் லேட்டஸ்ட் ரிலீசான ‘இரண்டாம் உலகம்’ மிகப்பெரிய பட்ஜெட் அடி என்பதால் ஆளாளுக்கு செல்வாவை திட்டிக் கொண்டிருக்கின்றனர்.

இதில் தன் பங்குக்கும் ‘இரண்டாம் உலகம்’ தோல்விக்கு கருந்து சொல்லும் கந்தசாமியாக மாறியிருக்கிறார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.

“‘இரண்டாம் உலகம்’ படத்தை செல்வா ‘துப்பாக்கி’ பட சமயத்திலேயே ஆரம்பிச்சிட்டார். அப்புறம் திடீர்னு ஒருநாள் என்கிட்ட வந்து படத்தை முடிச்சிட்டேன், அதனால இத்தனை நாளைக்குள்ள எனக்கு மியூசிக் போட்டுத் தாங்கன்னு அடம்பிடிச்சார்.

நான், இல்ல செல்வா எனக்கு மூணு படங்களோட ஒர்க் போயிட்டிருக்கு. என்னால அவசரப்பட்டெல்லாம் எந்தப்படத்துக்கு ஒர்க் பண்ண முடியாது. உங்களுக்கு ரொம்ப அவசரம்னா வேற யாரரையாவது வச்சு பண்ணிக்கங்கன்னு சந்தோஷமாத்தான் சொன்னேன். மற்றபடி எனக்கு வருத்தமெல்லாம் இல்லை.

ஒரு படத்தோட பாட்டுங்றது காலத்தை கடந்து நிக்கணும். அதை அவசரப்பட்டு செய்ய முடியாது. எல்லாப் படங்களுக்குமே இசையை ரசிச்சு, நேசிச்சு தான் பண்றேன் அதுக்கு அவசரப்படாம இருக்கணும். மீறி அவசரப்பட்டா ரிசல்ட் இப்படித்தான் இருக்கும்” என்கிறார் ஹாரிஸ்.

நீங்க சொல்றதும் சரியாத்தான் இருக்கு பாஸ்…

Tags: , , ,

Leave a Reply