‘ஜில்லா’ பிரஸ்மீட் கேன்சல் : நிருபர்களை சந்திக்க மறுத்தாரா விஜய்? – வெளிவராத பின்னணித் தகவல்கள்!

vijay-kajalபொங்கலுக்கு ரிலீசாக இருக்கும் ‘ஜில்லா’ படம் திட்டமிட்ட தேதியை நெருங்குவதால் அதற்கு முன்பாகவே ஒருநாள் ஒட்டுமொத்த மீடியாக்களையும் நேரில் வரவழைத்து மீட் பண்ணிடலாம் என்று ப்ளான் போட்டிருக்கிறார் படத்தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி.

இதற்காக ஒருநாள் சந்திப்பு தேதியையும் பிக்ஸ் பண்ணி விட்டு, சென்னை தேனாம்பேட்டையிலுள்ள ‘ரெயின் ட்ரீ’ நட்சத்திர ஹோட்டலில் பிரஸ்மீட் நடத்தவும் முடிவுசெய்து அதற்கான வேலைகளை ஆரம்பித்திருக்கிறார்கள் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரியும், டைரக்டர் நேசனும்.

எல்லா வேலைகளையும் முடித்து விட்டு திடீரென்று ஹீரோ விஜய்க்கு போனை போட்டு விவரத்தைச் சொல்ல, “ப்ரஸ்மீட்டா… நோ சார் என்னால அவங்களையெல்லாம் மீட் பண்ண முடியாது” என்று கண்டிஷனாக சொல்லியிருக்கிறார் விஜய்.

இதனால் அதிர்ச்சியடைந்த செளத்ரி உடனே காரை எடுத்துக் கிளப்பிக் கொண்டு விஜய்யை நேரில் சந்தித்திருக்கிறார்.

“இல்ல… விஜய் தம்பி, நாம எப்பவுமே மீடியாக்கள் கூட இணக்கமா போகணும். நல்ல படங்களுக்கு அவங்க ஃபுல் சப்போர்ட் பண்றாங்க, அப்படியிருக்கும் போது அவங்களை மீட் பண்ணலேன்னா அது ரொம்ப தப்பாயிடும் தம்பி” என்று அட்வைஸ் பண்ணியிருக்கிறார்.

ஆனால் விஜய்யோ “இல்ல சார், ‘தலைவா’ படத்துல என்னை விட அந்தப் படத்தோட தயாரிப்பாளரை மீடியாக்கள் ரொம்ப அழ வெச்சுட்டாங்க, என்னைப்பத்தி எப்பவுமே மீடியாக்கள் தப்பு தப்பாத் தான் எழுதுறாங்க, அதனால் நா அவங்களை மீட் பண்ண விரும்பல, வேணும்னா நீங்களும், டைரக்டர் நேசனும் மட்டும் மீடியாக்களை மீட் பண்ணிக்கங்க, நான் கண்டிப்பா வரவே மாட்டேன்,ப்ளீஸ் என்னை கம்பல் பண்ணாதீங்க… என்று அடம்பிடித்திருக்கிறார்.

இதனால் கடந்த வாரத்தில் ஒருநாள் பிக்ஸ் பண்ணப்பட்ட ‘ஜில்லா’ படத்தின் பிரஸ்மீட் விஜய்யின் பிடிவாதத்தால் கடைசி நேரத்தில் கேன்சல் செய்யப்பட்டுள்ளது. அதற்காக தயாரித்து வைக்கப்பட்டு மீடியாக்களுக்கு தரப்பட இருந்த ஸ்டில்ஸ் சிடிக்களும் கூட பிறகு ஒருநாளில் ரிப்போர்ட்டர்களின் கையில் தனித்தனியாக தரப்பட்டது.

இருந்தாலும் மீடியாக்கள் இல்லாமல் ஒரு படத்தின் பப்ளிசிட்டி என்பது சாத்தியமில்லாததால் இன்னும் சில தினங்களில் ஒட்டுமொத்த மீடியாக்களையும் தனது ஆபீஸுக்கு வரவழைத்து டைரக்டருடன் மட்டும் சந்திக்கும் முடிவில் இருக்கிறாராம் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி.

இதற்கிடையே மீடியாக்களை மீட் பண்ணவே மாட்டேன் என்று அடம்பிடிக்கும் விஜய்யின் பி.ஆர்.ஓ கடந்த சில தினங்களில் தினசரி பேப்பர்களின் ரிப்போர்ட்டர்களை மட்டும் சில பங்ஷன்களில் நேரில் பார்த்து “ஜில்லா ரிலீசாகிற வரைக்கும் எதையுமே தப்பு தப்பா எழுதாதீங்க..?” என்று வேண்டுகோள் வைத்தபடி இருந்திருக்கிறார்.

சம்பந்தப்பட்டவர் விஜய். அவர் நேரில் வந்து விளக்கம் சொல்லும் சொல்லும் வரை இந்தப்பிரச்சனைக்கு தீர்வே இல்லை. ‘தலைவா’ ஆக ஆசைப்படும் விஜய்க்கு இதெல்லாம் தெரியாதா..?

Tags: ,

Leave a Reply