“வடக்கிலுள்ள உள்ளூராட்சிச் சபைகளின் செயற்பாடுகளைச் செயலாளர்களினூடாக வடமாகாண அபிவிருத்திக் குழுத்தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியும் தடுத்துநிறுத்துகின்றனர்.
அத்துடன், வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மக்கள் வழங்கிய மூன்றில் இரண்டு பெரும்பான்மையைத் தாண்டிய ஆதரவையும் அவகள் மறுத்துரைக்கின்றனர்.
எனவே, இனியும் அடிவருடிகளை நம்பி அரசு செயற்படுவது நாட்டை மீண்டும் சேற்றுக்குழிக்குள் தள்ளுவதற்கு ஒப்பானதாகும்.”
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் நேற்று சபையில் தெரிவித்தார்.
வடக்கிலுள்ள உள்ளூராட்சி சபைகளின் செயலாளர்களும் உத்தியோகத்தர்களும் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு அதிகாரங்கள் இல்லை யயன்றும் தங்களுக்கே அதிகாரங்கள் இருக்கின்றன என்ற தொனியிலும் செயற்படுகின்றனர்.
இதனைக் கண் டித்து தீர்மானங்கள் நிறைவேற்றினால்கூட எந்தவிதமான நடவடிக்கை களும் எடுக்கப்படுவதில்லை என்றும் அவர் கூறினார். நாடாளுமன்றில் நேற்று நடை பெற்ற பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சுகள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியவை வருமாறு:
வறுமை ஒழிப்பு பற்றியும் சமுர்த்தி குறித்தும் இங்கு பேசுகின்றீர்கள். ஆனால், வன்னி மக்களின் இரண்டாயிரம் கால்நடைகளை இராணுவம் ஆக்கிரமித்துவைத்துள்ளது. இவற்றை மீளவும் மக்களிடம் கையளிக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அதே வேளை, பலாலி விமானநிலைய சேவையை ஆரம்பித்தால் திருச்சி, சென்னை ஆகிய இடங்களிலிருந்து பயணிகள் வருவார்கள். இது உங்களின் சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கு ஏதுவான காரணியாக அமையும்.
வடக்கில் இன்று மாவிட்டபுரத்துக்கு அப்பால் செல்ல முடியாத சூழ்நிலை இருக்கின்றது. அண்மையில் மக்களின் பிரச்சினைகளை அறிவதற்காக காங் கேசன்துறைக்குச் சென்ற வடக்கு மாகாண முதல்வர் மாவிட்டபுரத்துடன் திருப்பி அனுப்பப்பட்டார். இவ்வாறான கட்டுப்பாடுகளை அரசு இல்லாது செய்ய வேண்டும்.
போர் முடிவடைந்து நான்கு வரு டங்கள் கடந்துள்ள போதிலும் அரச தரப்பில் உரையாற்றும் அனைவரும் புலிப் பல்லவியையே பாடுகின்றனர். இந்த வருடத்துடனாவது இத்தகைய செயல்களைக் கைவிட்டு விடுங்கள். வடக்குத் தேர்தல் பற்றிப் பேசினீர்கள். சர்வதேசத்தின் நிர்ப்பந்தத்தால்தான் அதை நடத்தினீர்கள். மாறாக வடக்கு மக்களுக்கு ஜனநாயக உரிமைகளை வழங்கவேண்டும் என்ற நோக்கில் தான் அது நடத்தப்பட்டது.
அதேவேளை, நமது பிரச்சினை களை நாமே பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என அரச தரப்புக் கூறு கின்றது. 2011ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் 18 தடவைகள் பேச்சுகளை நடத்தியது. சரியான கோணத்தில் பேச்சு இடம் பெறாததால் அதைத் தொடர்ந்தும் முன்னெடுக்க முடியாமல் போனது. இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்ற முழு ஆர்வத்துடன் நாம் இருந்தோம் என்றார்.
















