வரவு செலவுத்திட்டத்தின் 50 வீதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடு;ம்பத்தாருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவப் பேரவை தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். கசினோ மற்றும் ராஜபக்ஷ நட்பான இந்த வரவு செலவுத் திட்டம் மக்களுக்கு எதிரானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வரவு செலவுத் திட்டத்தில் பல்வேறு விடயங்களுக்கு வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எனவே பொருட்கள் சேவைகளுக்கான விலை உயர்வடையும் எனவும் இதன் மூலம் வாழ்க்கைச் செலவு அதிகரிக்கும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சமூகத்திற்கு நன்மை ஏற்படுத்தும் வகையில் இந்த வரவு செலவுத் திட்டம் உருவாக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறுகியகால அல்லது நீண்ட காலத் திட்டங்கள் அடிப்படையில் இந்த அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தை உருவாக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் இந்த வரவு செலவுத் திட்டத்தை அரசியல் நோக்கத்திற்காகவே பயன்படுத்திக்கொண்டுள்ளது. இந்த வரவு செலவுத் திட்டத்தில் மக்கள் நலன் உதாசீனம் செய்யப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி எந்தவொரு தேர்தலையும் எதிர்நோக்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
















