செய்நன்றி மறந்து பயணிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு! தோழமையுடன் காவியன்

maveerarதமிழ்த் தேசியக்கூட்டமைப்பு மாவீரர்களின் தியாகத்தினாலும் தமிழ் மக்களின் தலைவன் கொள்கையாலும் தலைவனால் உருவாக்கப்பட்ட ஒரு அரசியல் அமைப்பு. சிறிலங்கா அரசியற் கட்சியில் தம் இனத்தின் துன்பங்களை வென்றேடுக்க நான் பெரிது நீ பெரிது என்று எதிரியிடம் மண்டியிட்டு அலைந்து திரிந்த கட்சிகளை அழைத்து ஓன்றாக ஒரு நல்ல நோக்கத்திற்க்காக அமைத்ததே தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்பதை மறவாதீர்கள்.

மாறாக தேர்தல் காலங்களில் மட்டும் எமது மக்களுக்காக போராடிய அமைப்பினை போற்றி புகழ்ந்து வாக்குச் சேகரித்து எதிரியிடம் எம் இனத்தின் மானம் மரியாதைகளை விற்று பிழைப்பு நடத்தவேண்டாம். ஏதோ வடமாகாணசபை ஆட்சி கிடைத்ததும் தமிழருக்கு விடிவு வந்துவிட்டது போல் ஆர்ப்பரிப்பதும் சில உறுப்பினர்களும் அமைச்சர்களும் வீராவேசம் பேசுவது வெட்கப்படவேண்டியவை.

அண்மையில் புல்லைப்பிடுங்கி விட்டு ஏதோ எதிரியின் பாசறை அழித்தது போல் ஒரு அமைச்சர் தன்னை தளபதியாக நினைத்து அறிக்கை விடுகின்றார். கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்றில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரிக்கவில்லை என்று பேசி எதிரி காலில் விழுவது வேதனைக்குரியது.

பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் பிரபாகரன் ஒரு தேசிய வீரன் எனக் கூற அது அவருடைய தனிப்பட்ட கருத்து, கூட்டமைப்பின் நிலைப்பாடு அதுவில்லை என கூட்டமைப்பின் தலைவர் கூறுவதும் அதனை தேசியப் பட்டியல் உறுப்பினர் ஏ.சுமந்திரன் ஆதரிப்பது போன்று கருத்து வெளியிட்டமையும் தமிழ் மக்கள் மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுரேஸ் எம்.பி சொல்கிறார் விடுதலைப்புலிகளின் பெயரை உச்சரிக்க வேண்டாம் என, செல்வம் எம்.பி சொல்கிறார் விடுதலைப் புலிகளின் பெயரை உச்சரிக்காவிட்டால் ஒரு வாக்கைக் கூட யாரும் பெற முடியாதாம். இவை எல்லாம் பாராளுமன்றத்தில் ஒலித்தவை. இன்று எமது மண்ணுக்காக போராடிய மாவீரர்கள் மற்றும் போராளிகளின் தியாகங்களை கொச்சைப்படுத்தி வார்த்தை பிரயோகங்களை வெளியிடுவது உங்கள் தலையில் நீங்களே மண் போடுவதற்கு சமனாகும்.

மறந்துவிடாதீர்கள் இன்று விடுதலைபுலிகள் இல்லை என்றும் எப்படி மாவீரர்கள் வந்து உங்களை கேள்வி கேட்பார்கள் என்று தவறுதலாகவேனும் தப்புக்கணக்கு போடவேண்டாம். அவர்களை வளர்த்த மக்கள், மாவீரர்களின் பிள்ளைகள் உங்களுடன் தான் இருக்கிறார்கள். மீண்டும் நீங்கள் அவர்களிடம் தான் சென்று வாக்கு சேகரிக்கவேண்டும். துணிவிருந்தால் அடுத்த தேர்தலில் விடுதலைப்புலிகள் நாமத்தையும் மாவீரர் என்ற திருவாசகத்தையும் உச்சரிக்காது தேர்தலில் வென்று காட்டவும்.

Tags: ,

Leave a Reply