நாடாளுமன்றில் நேற்று ஐ.தே.க. குத்துக்கரணம்; மன்மோகன் வருகையை எதிர்க்கவில்லையென மறுப்பு

unp“இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் இலங்கைப் பயணத்தை ஐக்கிய தேசியக் கட்சி எதிர்க்கவில்லை” என எதிர்க்கட்சியின் பிரதம கொரடாவும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோன் அமரதுங்க நேற்று சபையில் தெரிவித்தார்.

இந்தியப் பிரதமர் இலங்கை வரலாம், யாழ்ப்பாணம் செல்லலாம். அதில் எமக்குப் பிரச்சினை இல்லை. ஆனால் அதற்கான ஒழுங்கு மரபுகள் பின்பற்றப்படவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் நேற்று சிறப்புரிமைப் பிரச்சினையின் கீழ் கருத்துகளை முன்வைத்த போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் இலங்கை விஜயம் தொடர்பில் அண்மையில் நான் இந்தச் சபையில் முன்வைத்த கருத்தை ஆங்கிலப் பத்திரிகை ஒன்று இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தை ஐ.தே.க. எதிர்க்கின்றது என கொட்டை எழுத்துகளில் பிரசுரித்துள்ளது. இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தை ஐ.தே.க. எதிர்க்கவில்லை.

வடமாகாண முதலமைச்சரின் அழைப்பை ஏற்று அவர் இலங்கை வரலாம். யாழ்ப்பாணம் செல்லலாம். எமக்குப் பிரச்சினையில்லை.

ஆனால் அவரின் இலங்கை விஜயத்திற்கு உரிய ஒழுங்கு மரபுகள் பின்பற்றப்பட வேண்டும் என்பதையே கூறினேன். இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தை ஐ.தே.க. எதிர்க்கவில்லை என்றார் ஜோன் அமரதுங்க.

Tags: , ,

Leave a Reply