வடக்கில் 83 பாடசாலைகளில் இராணுவத்தினர் தங்கியுள்ளனர் – செல்வம் அடைக்கலநாதன்

Selvam_Adaikalanathanவடக்கில் இன்னமும் 83 பாடசாலைகளி;ல் இராணுவத்தினர் தங்கியுள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வரவு செலுவத் திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் குறித்த பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண மாணவ மாணவியரின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுது;த அரசாங்கம் கூடுதல் முனைப்பு காட்ட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வன்னியில் இன்னமும் 16 பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். பாடசாலைகளை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Tags: , ,

Leave a Reply