புலிகளின் பெயரைக் கூறாமல் முடிந்தால் வாக்கு கேளுங்கள்; அரசுக்கு கூட்டமைப்பு சவால்

Selvam_Adaikalanathan“ஒருவேளை கஞ்சிக்குக்கூட வழியின்றி இருக்கும் எமது மக்களின் பிரச்சினைகளை இந்தச் சபையில் கூறினால் எம்மீது புலி முத்திரை குத்துகிறீர்கள். புலிகளை அழித்து விட்டதாகக் கூறும் நீங்கள் உங்கள் வாக்கு வங்கியைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவே இன்னமும் புலிகளின் பெயரைக் கூறுகிறீர்கள்.புலிகளின் பெயரைக் கூறாமல், முடிந்தால் வாக்குக் கேட்டுப் பாருங்கள்.”

இவ்வாறு அரசுக்கு நேற்று முன்தினம் சவால் விடுத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்.

மீண்டும் ஒரு போர் வரும் அல்லது வர வேண்டும் என்பதற்காகவும் ஆயுதங்களை வாங்கிக் குவிக்கவேண்டும் என்பதற்காகவுமா இந்த வரவு – செலவுத்திட்டத்திலும் இராணுவத்துக்காக அதிக நிதி ஒதுக்கியுள்ளீர்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல்துறை உள்ளிட்ட அமைச்சுகள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

இந்த வரவு – செலவுத் திட்டத்தில் எமது மக்களின் அபிவிருத்திக்காக எந்தவொரு திட்டமும் முன்வைக்கப்படவில்லை. அவர்களுக்கென நிதி ஒதுக்கீடுகளும் செய்யப்படவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

Tags: , ,

Leave a Reply