இந்தியாவுடன் முரண்பட்டால் முழு நஷ்டம் இலங்கைக்கே; ஐக்கிய தேசியக் கட்சி எச்சரிக்கை

unp2“இந்தியாவுடனும் ஐரோப்பாவுடனும் மோதிக்கொண்டும், முரண்பட்டுக் கொண்டும் இலங்கையால் வர்த்தகத்தில் ஈடுபடமுடியாது” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ நேற்றுமுன்தினம் சபையில் தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான சேவைகள் உள்ளிட்ட அமைச்சுகள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:

துறைமுகங்களைப் பொறுத்த வரையில் இலங்கை இன்று 32ஆவது இடத்தில் இருப்பது உண்மை. எனினும், இலங் கைத்துறை முகங்கள் ஏற்றுமதி, இறக்குமதியிலன்றி இடைத்தங்கல் நடவடிக்கைகளிலேயே தங்கியுள்ளது.

இந்தியரின் நடவடிக்கைகளிலும் இலங்கையின் துறைமுகங்கள் தங்கியுள்ளன. தமது துறைமுகங்களை அபிவிருத்தி செய்யும் 5 வருட திட்டமொன்றை இந்தியா முன்னெடுத்துள்ளது. இந்தத் திட்டம் எந்த அரசு வந்தாலும் நடைமுறைப்படுத்தப்படும்.

அந்தவகையில், சேது சமுத்திரத் திட்டத்தை இந்தியா ஆரம்பித்துள்ளது. அந்தத் திட்டம் பூர்த்தியானால் மேற்குலகுக்கும், கிழக்குலகுக்கும் இடையில் தொடர்பு ஏற்படுத்தப்படும் என்றார்.

Tags: , , ,

Leave a Reply