‘பிரியாணி’க்கு யு சர்ட்டிபிகேட் மறுப்பு :‘ரிவைஸிங் கமிட்டி’ ரிட்டன் அடித்த பின்னணி சமாச்சாரங்கள்!

biriyaniயுவனின் 100-வது படம் என்ற பெருமையுடன் வெங்கி, பிரேம்ஜி, கார்த்தி, யுவன் சங்கர் ராஜா என ஒரே பள்ளியில் படித்தவர்கள் ஒன்று சேர்ந்து எடுத்த படம் என்ற பெறுமையும் ஒன்று சேர்ந்த படம் தான் வெங்கட்பிரபுவின் ‘பிரியாணி’. பலமுறை ரிலீஸ் தேதி முன்,பின் அறிவிக்கப்பட்டு கடைசியாக இந்த மாதம் 20- ஆம் தேதி கன்பார்ம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

அதற்குள் படத்துக்குள் கண்களை இறுக்க மூடிக்கொள்ளும் அளவுக்கு ஆபாசக் காட்சிகள் அளவில்லாமல் கொட்டிக் கிடப்பதாக படத்தை ரசித்துப் பார்த்த சென்ஸார் அதிகாரிகள் குறிப்பெடுத்து சொன்னதை அடுத்து படத்துக்கு ஏ சர்ட்டிஃபிகேட் தவிர வேறு எந்த சர்ட்டிஃபிகேட்டும் கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது. வேண்டுமானால் யு/ஏ சர்ட்டிபிகேட் கொடுக்கிறோம் என்று அதைக் கொடுத்தார்கள்.

இதனால் அதிர்ச்சியின் உச்சத்துக்குப் போன ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் படத்தை ரிவைஸிங் கமிட்டிக்கு அனுப்பியது.

சரி அங்காவது யு சர்ட்டிஃபிகேட் கொடுத்து விடுவார்கள் என்று நம்பிக் கொண்டிருக்க அவர்களோ இந்தப் படத்துக்கெல்லாம் கம்ப்ளீட் ஏ சர்ட்டிபிகேட் தான் கொடுக்க வேண்டும், அவர்களாவது யு/ஏ கொடுத்தார்களே..? அதை சந்தோஷமாக வாங்கிச் செல்லுங்கள் என்று ஷாக் கொடுத்தார்கள்.

காரணம் அந்தளவுக்கு படத்தில் ஆபாசக் காட்சிகளை தன் இஷ்டத்துக்கு படமாக்கி விட்டு வந்திருக்கிறார் டைரக்டர் வெங்கி.

பிரியாணி ‘யவெங்கட் பிரபு டயட்’ என்று டைட்டிலும், சப்டைட்டிலும் போட்டவுடன் கார்த்தி ஏதோ பிரியாணி கடை வைத்திருக்கும் பாய் கெட்டப்பில் வருவார் என்று எல்லோரும் ஜோஷியம் சொன்னார்கள். ஆனால் வெங்கி மற்றும் பிரேஜ்மி அன்கோவோ பிரியாணி என்பதற்கு அர்த்தமே வேறு என்று விளக்கம் சொல்லியிருக்கிறார்கள்.

மாண்டி தாக்கர்

படம் ரிவைஸிங் கமிட்டி வரை சென்று பல்பு வாங்கி ரிட்டன் ஆகியிருக்கும் நிலையில் அப்படி என்ன சமாச்சாரம் இந்தப்படத்தில் இருக்கிறது என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கும்.

பொதுவாக ஏ சர்ட்டிஃபிகேட் என்றால் ஒன்று கத்தி, அரிவாள், ரத்தம் என்று வன்முறைக்காட்சிகள் அதிகம் இருக்கும் படத்துக்கு கொடுப்பார்கள். இல்லையென்றால் ஷகிலா ஆண்டி பட ரேஞ்சுகளில் சீன்கள் இருக்கும் படங்களுக்கு கொடுப்பார்கள். இதில் இரண்டாவது ரகம் தான் பிரியாணி படம்.

ஆமாம், “படத்தில் வன்முறைக் காட்சிகள், ரத்தம் என்று எதுவுமே இல்லை என்று சொன்ன டைரக்டர் வெங்கி “நிஜ வாழ்க்கையில நாம செய்கிற விஷயங்களைத் தான் நான் படத்தில் காட்சிகளாக வெச்சிருக்கேன். அது நிஜ வாழ்க்கையில நடந்தா மத்தவங்க கண்ணுக்கு தப்பாத் தெரிய மாட்டேங்குது, அதுவே படமா எடுத்தா அதை தப்புன்னு சொல்றாங்க…” என்று திருவாய் மலர்ந்து விளக்கம் கொடுத்தார். அதுக்காக முதலிரவு சமாச்சாரங்களைக் கூட ஸ்க்ரீன் கட்டி காட்டுவீங்களா வெங்கி..?

அதாவது இரவில் நடக்கும் குடி, கூத்து, கும்மாளம்,பொம்பளை சுகவாசம் என்று இந்த வார்த்தைகள் சம்பந்தமாக நவீன யுக வரலாற்றில் இருக்கும் அத்தனை பலான சமாச்சாரங்களும் படத்தில் உள்ளதாம். அதுபோக படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் வரும் பஞ்சாப் பட்டுப் புடவையான மாண்டி தாக்கர் என்ற நடிகையை சுற்றி பிண்ணப்பட்டிருக்கும் காட்சிகளும் படத்துக்கு ஏ, யு/ஏ சர்ட்டிபிகேட்டுகளை பரிந்துரை செய்ய மிக முக்கிய காரணமாம். அதனால் தான் படத்துக்கு ரிவைஸிங் கமிட்டி எந்த தயவு தாட்சண்யமும் காட்டாமல் திருப்பி அனுப்பியிருக்கிறது.

இதனால் அரசின் வரிச்சலுகை உள்ளிட்ட பல சலுகைகளை அனுபவிக்கத் தயாராக இருந்த ‘பிரியாணி’யின் தயாரிப்பு தரப்பு கையை பிசைந்து கொண்டு ‘பிரியாணி’யை பொட்டலம் போட்டு தியேட்டர்களுக்கு பார்சல் அனுப்பத் தயாராகி வருகிறார்கள்.

Tags: , , ,

Leave a Reply