“நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கும் விவகாரத்தில் உதவத் தயார்” – சுமந்திரன்

sumanthiran1சில நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கும் விவகாரத்தில் அரசாங்கத்திற்கு உதவத் தயார் – சுமந்திரன்

குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கும் விவகாரத்தில் அரசாங்கத்திற்கு உதவிகளை வழங்கத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சில நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் இலங்கை அரசாங்கத்தின் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கும் முனைப்புக்களில் பங்களிப்பு வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் மெய்யாகவே முயற்சிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியா, அமெரிக்கா, தென் ஆபிரிக்க போன்ற நாடுகள் இந்த பிரச்சினையில் உதவி வழங்கத் தயாராக இருப்பதாகவும், அந்த உதவிகளை அரசாங்கம் ஏற்றுக் கொண்டு சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்பட முனைப்பு காட்ட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால், குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகிய விவகாரத்தில் பூரண ஒத்துழைப்பை தமது கட்சி வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் அரசாங்கம் தொடர்ந்தும் அழுத்தங்களை பிரயோகித்தால் அது பாதக விளைவுகளையே ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்களுக்கு சமவுரிமைகளை வழங்க அரசாங்கம் விரும்பினால், ஒன்றிணைந்து பேச்சுவார்த்தை நடத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து மக்களினாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஓர் தீர்வுத் திட்டத்தை பெற்றுக் கொள்ள அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தத் தயார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், அந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்தும் நீடிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க அரசாங்கம் கூடுதல் முனைப்பு எடுத்துக்கொள்ள வேண்டுமென சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags: ,

Leave a Reply