அமெரிக்காவிற்கு பயந்தே இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை சில நாடுகள் ஆதரித்தன என ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்று இலங்கை இராணுவம் போர் குற்றம் புரிந்துள்ளது.
அதன்படி இலங்கை அரசு போர் குற்றம் செய்தது என குற்றம் சாட்டப்பட்டு இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் வெற்றிபெற்றமை குறித்து வெளியுறவு அமைச்சு விளக்கமளிக்க வேண்டும் என்று சஜித் பிரேமதாசா கோரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கு வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பீரிஸ் பதிலளிக்கையில்,
கடந்த 2011ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் கொண்டுவரப் போவதாக கனடா வெளியுறவு அமைச்சர் கூறினார். ஆனால் அதற்கு ஆதரவு இல்லாததால், அவர்கள் அதை செய்யவில்லை.
எனினும் அமெரிக்கா 2012, 2013-ம் ஆண்டில் மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வந்தது.
அந்த தீர்மானங்கள் வெற்றி பெற்றன. காரணம் அமெரிக்காவிற்கு பயந்தே இந்த தீர்மானத்தை சில நாடுகள் ஆதரித்துள்ளன.
அமெரிக்காவுடனான இருதரப்பு உறவில் விரிசல் ஏற்படும் என்ற காரணத்தாலேயே நாங்கள் அமெரிக்கா கொண்டுவந்த இந்த தீர்மானத்தை ஆதரித்தோம் என்று பல நாட்டு தலைவர்கள் என்னிடம் கூறியுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
















