நெல்சன் மண்டேலா பழிவாங்கும் எண்ணத்துடன் செயற்படவில்லை – ரணில்

ranilதென் ஆபிரிக்காவின் முதலாவது கறுப்பினத் தலைவர் நெல்சன் மண்டேலா பழிவாங்கும் எண்ணத்துடன் செயற்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதன் பின்னர் விரும்பியிருந்தால் வெள்ளையினத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருக்கலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், மண்டேலா பழிவாங்கும் எண்ணத்துடன் செயற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாற்றுச் சிந்தனையாளர்களுக்கு மண்டேலா சந்தர்ப்பம் வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.

சாகும் வரையில் தேவையென்றால் ஜனாதிபதியாக பதவி வகித்திருக்க மண்டேலாவிற்கு சந்தர்ப்பம் காணப்பட்ட போதிலும், அவர் அதிகார மோகத்தைக் கொண்டிருக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கையில் பல விடயங்கள் கற்றுக்கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Tags: , ,

Leave a Reply