மறைந்த நெல்சன் மண்டேலாவுக்கு உலகெங்கிலுமிருந்து அரச தலைவர்கள், முன்னாள் அரச தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச பிரமுகர்களும் தங்களின் புகழஞ்சலிகளை செலுத்தி வருகின்றனர்.
அவரிடமிருந்து அரச தலைவர்கள் என்ன வகையான பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும் என்று இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பிபிசியிடம் தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்.
இலங்கையின் தற்போதைய நிலைமையை பார்க்கும்போது, ‘அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக சில அரசியல்வாதிகள் மற்ற இனத்தைச் சேர்ந்த மக்களைக் கொல்லவும், தாக்கவும் எரிக்கவும் தயாராக இருக்கிறார்கள்’ என்று கூறினார் சந்திரிக்கா குமாரதுங்க.
தாங்கள் சிங்கள பெளத்த தேசத்துக்கு மட்டுமே பிரதிநிதிகள் என்று காட்டுவதற்காகவே மற்ற சமயங்களை, இனங்களை, சமூகங்களை ஒடுக்கும் நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் சில அரசியல்வாதிகள் கூறுகின்றனர்.
















