அருந்ததி புகழ் அனுஷ்கா தற்போது ராணி ருத்ரம்மாதேவி, பாகுபாலி ஆகிய சரித்திர படங்களில் நடித்து வருகிறார்.
இந்த படங்களுக்காக பழங்கால சண்டை பயிற்சிகளை பயிற்சி எடுத்து வருடக்கணக்கில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதில் ருத்ரம்மா தேவி படத்தை முடித்து விட்டவர், அடுத்தபடியாக பாகுபாலியில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், மேலும் சில தெலுங்குப்பட இயக்குனர்களும் சரித்திர கதைகளை தயார் செய்து கொண்டு அனுஷ்காவை துரத்திக்கொண்டிருக்கிறார்களாம்.
இதனால் இந்த படங்களை முடித்ததும் ஒரு சேஞ்சுக்காக ரொமான்ஸ் கதைகளில் நடிக்கலாம் என்று இருந்த அனுஷ்கா, அவர்களின் பிடியில் சிக்கி கிடக்கிறாராம்.
அப்படி சில கதைகளை கேட்டு வைத்திருக்கும் அனுஷ்கா, ராஜமவுலி இயக்கத்தில் நடித்து வரும பாகுபாலியை முடித்ததும், 16ம் நூற்றாண்டு கதை ஒன்றில் நடிக்கிறாராம். கோல்கொண்டா என்ற ராஜ்யத்தை ஆண்டு வந்த முகமது ஹூலி ஹூதுப் ஷா என்ற முஸ்லிம் மன்னனின் மனைவியைப் பற்றிய கதையில் அப்படம் உருவாகிறதாம்.
பாஹ்மதி என்று பெயர் வைத்திருக்கும் அப்படத்துக்காக முஸ்லிும் இளவரசியாக மாறுகிறாராம் அனுஷ்கா.
















