சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழக இரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஸ்ரீதிவ்யா.
முதல் படத்திலேயே பளிச்சென்று மனதில் ஒட்டிக்கொண்ட ஸ்ரீதிவ்யாவைப் பார்த்து அப்படத்தில் ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரடி அப்பன் என்று சிவகார்த்திகேயன் பாடியதைத் தொடர்ந்து இப்போது அவரை எங்கு பார்த்தாலும், அந்த பாடல் வரியைச் சொல்லியே கிண்டல் செய்கிறார்களாம் இரசிகர்கள்.
ஆனால், அப்படி கேட்கும் சில இரசிகர்களிடம், எங்க அப்பா யாருன்னு தெரியனுமா? என்று கேட்கும் ஸ்ரீதிவ்யா, அவர் ஆந்திராவில் பொலிஸ் ஆபீசரா இருக்கார். வேணும்னா உங்க அட்ரஸ கொடுங்க. அவரை உங்ககிட்ட பேச சொல்றேன் என்று ஷாக் கொடுக்கிறாராம்.
இதனால் அவரைப்பார்த்து கிண்டல் செய்யும் இரசிகர்கள் வாலை சுருட்டிக்கொண்டு ஓட்டம் பிடிக்கிறார்களாம்.
அதேபோன்றுதான் ஸ்ரீதிவ்யா ஆந்திராவில் படிக்கிற காலத்தில்கூட அவர் பின்னாடியே சில இளவட்டங்களும் சுற்றினார்களாம். அதோடு லவ் லெட்டர்கள்கூட கொடுத்தார்களாம்.
ஆனால், அவர்களை விரட்டியடிக்க ஸ்ரீதிவ்யா சொன்ன ஒரே வார்த்தை என் அப்பா பொலிஸ் அதிகாரி என்பதுதானாம். அதையடுத்து அத்தனை இளசுகளும் தெறித்து ஓடிவிட்டார்களாம்.
ஆனால், தற்போது இந்த விவகாரம் சினிமா வட்டாரங்களிலும் தெரியவர, ஸ்ரீதிவ்யா வருகிறார் என்றால், நாலு அடி தள்ளியே நிற்கிறார்களாம் நடிகர்கள்.
















