இந்திய டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது.
மொத்தம் உள்ள 70 இடங்களில் காங்கிரஸ் கட்சியால் 8 தொகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. இதனால் 3–வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்த தோல்வியால் டெல்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித் தனது பதவியை இராஜினாமா செய்தார். அவர் தனது இராஜினாமா கடிதத்தை கவர்னர் நஜிப்புக்கு அனுப்பி வைத்தார்.
ஷீலா தீட்சித் தொடர்ந்து 15 ஆண்டுகள் டெல்லி முதலமைச்சராக இருந்துள்ளார். 1998–ம் ஆண்டு முதல் இவர் முதலமைச்சர் ஆசனத்தில் வீற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
















