‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் தன்னை அறிமுகம் செய்தார் என்ற ஒரே காரணத்துக்காக ‘அன்னக்கொடி’ க்காக தனது மூத்த மகளை பாரதிராஜாவிடம் அனுப்பி வைத்தார் ‘மாஜி’ நடிகை ராதா.
ஆனால் ‘அன்னக்கொடி’ அம்மஞ்சல்லிக்குப் பிரயோஜனப் படாததால் அதற்கு முன்பாகவே ரிலீசான ‘கோ’ படம் தான் அக்கா கார்த்திகாவுக்கு வெற்றிப்படமாக அமைந்தது. ஆனாலும் அவர் கைவசம் இப்போது ‘டீல்’ என்ற படம் மட்டுமே உள்ளது.
சரி மூத்தது தான் இப்படி என்றால் இளைய மகள் துளசியாவது கடலில் வாசம் வீசுவார் என்று மணிரத்னத்தை நம்பி களம் இறக்கினார் ராதா. ஃப்ரெஸ்ஸாக வந்த துளசியும் வாசம் வீசாமல் கடல் தண்ணீரில் அடித்துச் சென்று விட அவர் கைவசமும் இப்போது ‘யான்’ என்ற ஒரே படம் தான் உள்ளது.
இந்த நிலையில், எப்படியாவது இளையமகளை தமிழ்த்திரையில் நிலைநிறுத்தி விட வேண்டும் என்ற திடமான முடிவில் இருக்கும் ராதா சில சின்ன பட்ஜெட் கம்பெனி படங்கள் மகள் துளசியை தேடிவந்தும் வேண்டாம் என்று சொல்லி விட்டாராம். அப்படி நடித்தால் தனது மகளின் ரேஞ்ச் இறங்கி விடும் என்று நினைக்கும் ராதா, ‘யான்’ வெளியாகி வெற்றி பெற்றால் மறுபடியும் மெகா படங்கள் தேடி வரும் என்று பட்ஜெட் படங்களையெல்லம் அப்படியே திருப்பி விட்டுக் கொண்டிருக்கிறாராம்.
அதோடு, தனது மார்க்கெட் டல்லாகி விட்டதை எண்ணி சோர்ந்து போயிருக்கும் இளையமகள் துளசியிடம், சினிமாவில் வெற்றி தோல்வியெல்லாம் ரொம்ப சகஜம். இதையெல்லாம் நாம சந்திச்சா தான் சினிமாவுல சாதிக்க முடியும் என்றெல்லாம் சொல்லி மகளை தேற்றி வருகிறாராம் ராதா.
















