டைட்டில் பிரச்சனை ஓய்ந்த கையோடு ‘புறம்போக்கு’ படத்தின் பப்ளிசிட்டி போட்டோஷூட்டை டிசம்பர் 1-ஆம் தேதி வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார் டைரக்டர் எஸ்.பி.ஜனநாதன்.
ஏற்கனவே நேஷனல் அவார்டு வின்னர் என்பதால் ஜனநாதனின் இந்தப்படத்துக்கு டைட்டிலை அறிவித்தபோதே எதிர்பார்ப்பு எகிறியடிக்க ஆரம்பித்து விட்டது. யூடிவி மோஷன் பிக்சர்ஸ் உடன் எஸ்.பி. ஜனநாதனும் தனது பைனரி பிக்சர்ஸ் கம்பெனியுடன் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் பப்ளிசிட்டி போட்டோஷூட் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே படத்தின் டைட்டிலில் யாரை புறம்போக்கு என்று சொல்கிறார்கள் என்று ஆர்யாவுக்கும் விஜய் சேதுபதிக்கும் செல்லச் சண்டை நடந்திருக்கிறது.
ஆர்யா, விஜய் சேதுபதியை பார்த்து படத்திற்கு புறம்போக்கு என பெயர் வச்சிருக்காங்க! இதுல நான் புறம்போக்கா? இல்ல நீங்க புறம்போக்கா? என கேட்க… அதற்கு நான் கூட இருக்கலாம்! இல்ல நீங்களா கூட இருக்கலாம் என விஜய் சேதுபதி ஜாலியாக சொல்லிக் கொண்டிருக்கும் போதே உள்ளே நுழைந்த டைரக்டர் பொதுமக்களுக்கு பயன்படுற எல்லாமும், எல்லாருமே புறம்போக்கு தான்.
இப்ப உங்க ரெண்டு பேர்ல யார் புறம்போக்குன்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க என்று சொன்னாராம். இதைக் கேட்ட யூடிவி தனஞ்ஜெயன் சிரிக்கத் தொடங்க அவரைப் பின்பற்றி அங்கிடுந்த மொத்த யூனிட்டுமே சிரிப்பாய் சிரித்திருக்கிறது.
புறம்போக்கு படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் முதல் குலு மணாலியில் தொடங்குகிறது.
டிஸ்கி : ( படத்தில் நீங்கள் பார்ப்பது ) விஜய் சேதுபதி நடித்துக் காட்ட ஆர்யா ரசிக்கிறார்.
எப்படியோ படத்தைப் பார்த்து விட்டு டைட்டிலைச் சொல்லியே ரசிகர்கள் திட்டாமல் இருந்தால் சரி…
















