நாட்டில் மஹிந்தவின் குடும்ப ஆட்சி: பிரதமரை கைது செய்ய வேண்டும் – தேரர்கள் ஆக்குரோசம்

monksமஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியானதன் பின் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் கோடீஸ்வரர்களாகியுள்ளதாக ஐக்கிய பிக்குகள் முன்னணி தெரிவித்துள்ளது.

வரவு – செலவுத் திட்டத்தில் அவர்களுக்கு 856 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய பிக்குகள் முன்னணியின் செயலாளர் தீனியாவல பாலித தேரர் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகையுடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சியை அழிக்கும் செயற்பாடுகளில் சஜித் பிரேமதாஸ ஈடுபட்டு வருவதாக அவர் கூறினார்.

முன்னாள் பிரதம நீதியரசர்களான சரத் என் சில்வா மற்றும் ஷிராணி பண்டாரநாயக்க ஆகியோர் வழங்கிய தீர்ப்பால் உறுப்பினர்கள் கட்சி மாறுவதாகவும் அதனால் கட்சிகள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையில் இன்று குடும்ப ஆட்சி நடப்பதாகவும் தாய்லாந்தில் அவ்வாறு நடந்ததால் மக்கள் போராட்டத்தால் அதன் பிரதமர் வெளிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கையில் அவ்வாறான ஒன்றை காண முடியவில்லை எனவும் தீனியாவல பாலித தேரர் குறிப்பிட்டார்.

அண்மையில் மீட்கப்பட்ட ஹெரோயின் தொகையில் குறைவு ஏற்பட்டு வருவதாகவும் சாதாரண நபர்கள் ஹெரோயின் வைத்திருந்தால் அவர் சிறையிலும் அதிகாரம் படைத்தவர்கள் ஹெரோயின் வைத்திருந்தால் சுதந்திரமாக திரிவர் என தேரர் தெரிவித்தார்.

இதேவேளை, பிரதமர் டி.எம். ஜயரட்னவைக் கைது செய்யுமாறு ஜாதிக ஹெல உறுமய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

பிரதமர் ஜயரட்ன பதவியை துறக்க வேண்டும் அல்லது கைது செய்யப்பட வேண்டுமென ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

ஒருகொடவத்த சுங்கப் பிரிவில் அண்மையில் மீட்கப்பட்ட 260 கோடி பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருள் அடங்கிய கொள்கலனை விடுவிப்பதற்கு பிரதமர் அலுவலகத்தினால் முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடிதத்தை எழுதிய நபர்கள் பற்றிய தகவல்களை பிரதமர் வெளியிடத் தவறினால் அவரை கைது செய்ய வேண்டுமென சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பௌத்த மதத்தை அழிக்கும் பிரதான மையமாக பௌத்த சாசன அமைச்சு செயற்பட்டுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

குற்றவாளிகளை பாதுகாக்க பிரதமர் முயற்சிக்கக் கூடாது எனவும் பிரதமர் குற்றவாளிகளை பாதுகாக்க முயற்சித்தால் அவரை கைது செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் ஆளும் கட்சியின் கூட்டுக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply