தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஏற்பாட்டில் யாழில் சர்வதேச மனித உரிமைகள் தின ஒன்றுகூடல்

kajendranதமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இணைந்து ஏற்பாடு செய்துள்ள சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்ட ஒன்றுகூடல் நிகழ்வு ஒன்று இடம்பெறவுள்ளது. மேற்படி ஒன்று கூடல் நிகழ்வின் முடிவில்

– காணாமல் போனவர்கள் தொடர்பில் பொறுப்புக் கூறல்
– சிறையிலுள்ள அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை
– இடம்பெயர்ந்த மக்கள் அவர்களது சொந்த இடங்களில் உடனடியாக மீளக் குடியமர்த்தப்படல்
ஆகியன உட்பட பல கோரிக்கைகள் உள்ளடக்கிய மனு ஒன்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளது.

திகதி:- 10-12-2013 (செவ்வாய்க்கிழமை)
இடம்:- இல 43, 3ம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணம்
நேரம்:- பி.ப 3.00 மணி

எனவே அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

நன்றி
செ.கஜேந்திரன்
பொதுச் செயலாளர்

Tags: , ,

Leave a Reply