சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது

world-human-rights-dayசர்வதேச மனித உரிமைகள் தினம் இன்றைய தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது. ‘தமது உரிமைகளை அறிந்துகொள்ள வேண்டும்’ என்ற தொனிப்பொருளில் இந்த ஆண்டின் மனித உரிமைகள் தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.

இம்முறை சர்வதேச மனித உரிமைகள் தினம் இலங்கையில் கல்வி மேம்பாட்டை முன்னிலைப்படுத்தி நடத்தப்பட உள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் பிரதீபா மஹானாமாஹேவா தெரிவித்துள்ளார். 1993ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்ட மனித உரிமைகள் தினத்திற்கு இன்றுடன் 20 வயதாகிறது.

இதேவேளை, சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு கொழும்பு மற்றும் பிரதேச மட்டத்தில் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சட்ட செயலாளர் நிமல் புஞ்ஜிஹேவா தெரிவிக்கின்றார். அனைத்து மனிதர்களுக்குக்கும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களுமே மனித உரிமைகளாக கருதப்படுகின்றன.

இனம், சாதி, நிற வேறுபாடுகள் என்ற பாகுபாடுகளை காரணம்காட்டி, எந்தவொரு மனிதனும், எவராலும் புறக்கணிக்கப்பட கூடாது என்பதே மனித உரிமைகள் தினம் நினைவுபடுத்தப்படுவதற்கான முக்கிய காரணமாகும் என அவர் தெரிவத்துள்ளார். வாழ்வதற்கான உரிமை, கருத்து சுதந்திரம், கல்வி உரிமை, உணவுக்கான உரிமை என்பவற்றினை பாதுகாப்பதற்கு நாம் அனைவரும், இன, மத, பால், வயது வேறுபாடின்றி ஒன்றிணைவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: , ,

Leave a Reply