இலங்கை கடற்படையினருக்கு இந்தியா பயிற்சியளிக்கத் தடை கோரிய வழக்கு தள்ளுபடி

high-court-indiaஇலங்கை கடற்படையினருக்கு இந்தியாவில் பயிற்சியளிப்பதற்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மதுரையை சேர்ந்தவர் ரமேஷ். இவர், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:

இலங்கையில் நடந்த போரில் ஈழத்தமிழர்கள் 2 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். தமிழ் பெண்கள் சிங்கள ராணுவத்தினரால் கற்பழிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டனர்.

இதுபோன்ற சூழ்நிலையில் இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தமிழர்களை அவமதிக்கும் செயலாகும். எனவே, மத்திய அரசு அந்த முடிவை திரும்ப பெற உத்தரவிட வேண்டும். இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்க தடை விதிக்க வேண்டும்.”

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சுதாகர், வைத்தியநாதன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கிற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்றனர்.

இதைத் தொடர்ந்து மனுதாரர் வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதாக தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Tags: , , ,

Leave a Reply