இளம் குடும்ப பெண் கடத்தி பலாத்காரத்திற்கு உட்படுத்தி கொலை

Sexual-Assaultதூத்துக்குடி அருகே இளம்பெண்ணை கடத்திய மர்ம நபர்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி கொலை செய்தார்களா என பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத், திருவேங்கடநாதபுரத்தை சேர்ந்தவர் சேர்மத்துரை, 42, இவரது மனைவி அருள் செல்வி, 39. இவர்களது மகள், சந்திரா, 15.

கேரளாவில் பணியாற்றும் சேர்மத்துரை, மாதத்திற்கு ஒரு முறை தான் வீட்டுக்கு வந்து செல்வார். டிசம்பர் 4ம் திகதி அருள்செல்வி சாத்தான்குளம் அருகேயுள்ள பனங்குளத்தில் உள்ள பெரியம்மா அன்னக்கிளி வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கிருந்து வீட்டிற்கு திரும்பிய அருள்செல்வியை காணவில்லை. இதுகுறித்து, கணவர் சேர்மத்துரைக்கு தகவல் தெரிவித்தனர்.

நாசரேத் பொலிசில், தன் மனைவியை காணவில்லை என சேர்மத்துரை முறைப்பாடு செய்தார்.

இந்நிலையில், மெய்ஞானபுரம் அருகேயுள்ள தேரிக்காட்டில் இளம்பெண்ணின் சடலம் கிடந்தது.

இது அருள்செல்வி தான் என்பதை கணவர் சேர்மத்துரை உறுதி செய்தார்.

அருள்செல்வி மர்ம நபர்களால் கடத்தப்பட்டு, பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து, நாசரேத் பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

Tags: , ,

Leave a Reply