ஆம்பூர் பிரியாணிக்கு எப்படி ஒரு குறிப்பிட்ட சீஸன் காலம் கிடையாதோ? அதேபோலத்தான் தமிழ்சினிமாவில் ஆர்யாவின் மார்க்கெட்டுக்கும் சீஸன் காலம் எதுவும் இல்லை.
எப்போதாவது ஒன்றிரெண்டு படங்களில் நடிப்பார்; அதில் ஒரே ஒரு படம் ஹிட்டாகும், அதை வைத்துக் கொண்டு வருஷம் முழுக்க அடுத்தடுத்து படங்களை கமிட் செய்து ஹீரோவாக நடித்துக் கொண்டிருப்பார்.படம் ஓடினாலும் ஓடாவிட்டாலும் ஆர்யாவின் மார்க்கெட் மட்டும் ஸ்டெடியாக இருக்கும்.
அதற்கு காரணம் எப்போதுமே தன் படங்களில் நடிக்கும் ஹீரோயின்களோடு ஹிஸ்ட்ரி, ஜாக்கிரபி என எல்லா கெமிஸ்ட்ரிகளோடு மிங்கிளாகி விடுவார். அதை வைத்துக் கொண்டே பிக்கப் ஆகி போய்க்கொண்டிருப்பார்.
இப்போது புறம்போக்கு, மீகாமன் ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கும் ஆர்யா மீகாமன் படத்தில் டைரக்டர் மகிழ்திருமேனியுடன் இணைந்திருக்கிறார்.
தடையற தாக்க படத்துக்குப் பிறகு மகிழ்திருமேனியின் இரண்டாவது படம் என்பதால் இது எப்படிப்பட்ட படம் என்ற சுவாரஷ்யம் ஒருபக்கம் ஃசைலண்ட்டாக இருந்தாலும் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடி யார்? என்ற தகவலும் அதே ஃசைலண்ட் மோடில் தான் இருந்தது.
ஆனால் ஆரம்பத்தில் ஆர்யாவுடன் புதிய கெமிஸ்ட்ரியை உருவாக்கிய டாப்ஸியைத் தான் இந்தப்படத்திலும் தனக்கு ஜோடியாக்கும்படி மகிழ்திருமேனியிடம் ரெகமெண்ட் செய்திருக்கிறாராம் ஆர்யா.
ஏதாவது ஒரு புதுப்பொண்ணை மும்பையிலிருந்து இறக்கி விடலாம் என்று திட்டம் போட்டு வைத்திருந்த மகிழ் திருமேனியிடம் பிரபலமான நடிகையை போட்டால் நன்றாக இருக்கும் என்று தயாரிப்பாளர் நேமிசந்த் ஜெபக்கும் டாப்ஸுக்கு பச்சைக் கொடி காட்ட உடனே போனைப் போட்டு டாப்ஸியை மடக்கிப் போட்டிருக்கிறார் மகிழ்திருமேனி.
முதல் செட்யூலில் ஹீரோயின் போர்ஷன் இல்லாமல் ஆர்யா சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டும் எடுக்கப் போகிறாராம் மகிழ்திருமேனி. மீகாமன் என்றால் கேப்டன் ஆப் த ஷிப் என்று சுத்தமான தமிழ்டைட்டிலுக்கு ஆங்கிலத்தில் அர்த்தம் சொல்லும் டைரக்டர், படத்தையும் கடலோரம் நடக்கும் ஒரு த்ரில்லர் படமாகத்தான் தர இருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.
உண்மையா திருமேனி சார்….?
















