இறுதிக்கட்ட போரில் இலங்கை படையினருக்கு, அமெரிக்கா போர்ப் பயிற்சி அளித்தது: மக்கள் தீர்ப்பாயத்தில் சாட்சியம் பதிவு

usa-flag2ரோம் நகரை தளமாகக் கொண்ட மக்கள் தீர்ப்பாயத்தின் மூன்றாம் நாள் நிகழ்வு, இன்று ஜேர்மனி பிரீமன் நகரில் இடம்பெறுகின்றது.
இந்த மக்கள் தீர்ப்பாயத்தின் போது, இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது, அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் நிலைப்பாடு குறித்து சாட்சிகள் பதிவு செய்யப்படுகின்றன.

நேற்று இடம்பெற்ற விசாரணையின் போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் “வானவில்” என்ற அர்த்தத்தைக் கொண்ட தேதுன்ன சிங்கள செய்திதாளின் ஆசிரியர் ரோஹித்த பாஷன சாட்சியம் அளித்தார்.

இதன்போது அவர் இலங்கையின் இறுதிப்போரின் போது அமெரிக்காவின் இணக்கப்பாடு இருந்ததாக குற்றம் சுமத்தினார்.

இலங்கைப் படையினருடன் அமெரிக்க படையினர் நித்தமும் போர் பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தனர். இதன் மூலம், இலங்கை படையினருக்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டதாகவும் ரோகித்த பாஷன சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், இன்று ரோம் மக்கள் தீர்ப்பாயத்தின் மூன்றாம் நாள் அமர்வு இடம்பெறுகிறது.

இந்த அமர்வின்போது விசாரணைகள் யாவும் முடிவடைந்து நாளை டிசம்பர் 10ஆம் திகதி சர்வதேச மனித உரிமை தினத்தன்று விசாரணையின் தீர்ப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த தீர்ப்பாயத்தின் சுமார் 10 நாடுகளின் அறங்கூறுனர்கள் பங்கேற்றுள்ளனர்.

Tags: , , ,

Leave a Reply