ரஜினி, கமல் இருவரும் தமிழ்சினிமாவின் ‘ரூட்டு தல’யாக இருந்தபோது, அடுத்த ரஜினி யார்? அடுத்த கமல் யார்? என்ற விவாதம் திரையுலகிலும், ரசிகர் மத்தியிலும் நடைபெற்று வந்தது.
அதற்கு விடையாக.. விஜய், அஜித் இருவரையும் காலம் அடையாளம் காட்டியது.
காலப்போக்கில் விஜய்யின் மவுசு மங்கத் தொடங்க..அந்த இடத்துக்கு சூர்யா வந்தார்.
புதிய ‘ரூட்டு தல’யான அஜித், சூர்யாவுக்கு இடையே இன்னும் போட்டியே சூடுபிடிக்கவில்லை.
அதற்குள் ‘அடுத்த அஜித் நான்தான்டா’ என்ற குரல் கோலிவுட்டில் கேட்க ஆரம்பித்துவிட்டது.
இப்படி குரல் கொடுத்தவர் யார் தெரியுமா?
நடிகர் ஜெய்!
அஜித்தின் ஆசி பெற்ற ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் ஜெய்யுக்கு ஏன் இந்த விபரீத ஆசை என்று தெரியவில்லை.
‘அடுத்த அஜித் நான்தான்’ என்று தன் நட்பு வட்டத்தில் அடிக்கடி சொடுக்குப் போட்டுச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்.
சொல்லில் மட்டுமல்ல, செயலிலும் அஜித்தை பின்பற்ற ஆரம்பித்துவிட்டார் ஜெய்.
தான் நடிக்கும் படத்தின் இசைவெளியீடு, பிரஸ்மீட், புரமோஷன் எதற்குமே வர மாட்டார் – அஜித்.
ராஜாராணி இசைவெளியீடு, பிரஸ்மீட் எதற்குமே ஜெய் வரவில்லை. அதேபோல், அவரது சமீபத்திய தோல்விப்படமான ‘நவீன சரஸ்வதி சபதம்’ படத்தின் புரமோஷன் உட்பட எதிலுமே ஜெய் கலந்து கொள்ளவில்லை.
இந்த விஷயத்தில் மட்டுமல்ல, இன்னொரு விஷயத்திலும் அஜித் வழி நடக்க ஆரம்பித்திருக்கிறார் ஜெய்.
பத்திரிகைகளுக்கு பேட்டி தர மாட்டார் – அஜித். சில சமயம் பத்திரிகை பேட்டிக்கு சம்மதித்தாலும் டி.வி.க்கு மட்டும் பேட்டி தருவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார் அஜித்.
ஜெய்யும் இப்படித்தான். பத்திரிகைக்குப் பேட்டி கேட்டால் சில சமயம் அரைகுறையாக தலையாட்டினாலும், டி.வி.க்கு பேட்டி என்றால் தலை தெறிக்க ஓடுகிறார்.
ஜெய்யின் இந்த லூஸ் டாக்கைக்கேள்விப்பட்ட அஜித் ரசிகர்கள், ‘தல’ ஆடலாம். வால் ஆடலாமா? என்று கடுப்பாகிறார்கள்.
















