இலங்கையில் லஞ்ச ஊழல் மோசடிகள் இடம்பெறுவதாக சீனாவும் குற்றம் சுமத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜாதிக சேவக சங்கமய தலைமையகத்தில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு பாரியளவில் கடன் வழங்கும் சீனாவும், இலங்கையில் ஊழல் மோசடிகள் இடம்பெறுவதனை ஒப்புக்கொண்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஊழல் மோசடிகள் இடம்பெறுவதாக சீனப் பத்திரிகை ஒன்றில் தகவல் வெளியிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நல்லெண்ண அடிப்படையில் சீனா இலங்கைக்கு கடன் உதவிகளை வழங்கி வருவதாகவும், இலங்கைத் தலைவர்களும் அரசியல்வாதிகளும் மேசாடிகளில் ஈடுபட்டு வருகின்றமையை சீனா புரிந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
2005ம் ஆண்டு வரையில் தேசிய கடன் 1.8 ட்ரில்லியன் ரூபாவாகக் காணப்பட்டதாகவும், தற்போது 6.6 ட்ரில்லியன் ரூபாவாக உயர்வடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த எட்டு ஆண்டுகளில் 4.8 ட்ரில்லியன் ரூபா கடனைப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும், இந்தக் கடன் அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளினால் அதிகரித்துள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
















