இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என கனடா அறிவித்துள்ளது.
மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்க கனடா முனைப்பு காட்டும் என அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் பார்ம் கில் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகள் கோட்பாடுகளை உறுதிப்படுத்தத் தவறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் நிலைமைகள் குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாமை, மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடாத்தப்படாமை போன்றன ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகள் முழுமையாக அமுல்படுத்தப்படுகின்றனவா என்பது தொடர்பில் கனடா உன்னிப்பாக அவதானித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன பக்கச்சார்பற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைமைப் பதவியை இலங்கை அரசாங்கம் சரியான முறையில் பயன்படுத்தி, நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முனைப்பு காட்டும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சட்டம் ஒழுங்கு மனித உரிமை போன்ற விவகாரங்களுக்காக கனடா தொடர்ந்தும் குரல் கொடுக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் சமூகத்துடன் தொடர்ந்தும் இணைந்து செயற்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
















