மறைந்த மாமனிதன் நெல்சன் மண்டேலாவின் இறுதி மணித்தியாலங்கள் அற்புதமானவை என்று அவரின் புதல்வி தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை தமது 95 ஆவது வயதில் மறைந்த நெல்சன் மண்டேலாவுக்கு இறுதி விடை வழங்க தமது குடும்பத்தினர் உட்பட அனைவரும் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தென்னாபிரிக்கா மறைந்த தமது தலைவருக்கான நினைவு கூறல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளன. சுமார்100 க்கும் அதிகமான அரச தலைவர்கள் தமது பயணங்களை தென்னாபிரிக்கா நோக்கி ஆரம்பித்துள்ளனர்.
















