ரஜினிக்கு அவமரியாதையை ஏற்படுத்தும் தொலைக் காட்சிகள்!

Rajini-kanthசினிமாவை நம்பி பிழைத்துக் கொண்டிருக்கும் பல தொலைக்காட்சிகள், சினிமாக்காரர்கள் வீட்டு கல்யாணத்தைக் கூட விட்டு வைக்கவில்லை. அதையும் ஒளிபரப்பி காசு பாக்கிறார்கள்.

கொஞ்சம்விட்டால்..சினிமா நட்சத்திரங்கள் பாத்ரூம் போவதைக் கூட ‘லைவ்’வாக ஒளிபரப்புவார்கள் போலிருக்கிறது. (கர்மம்..கர்மம்..)

இப்படிப்பட்டவர்கள் ரஜினியின் பிறந்தநாளை விட்டு வைப்பார்களா?

ஒவ்வொரு வருடமும் ரஜினியின் பிறந்த தினத்தை இந்தியாவின் சுதந்திர தினத்தைவிட கூடுதல் முக்கியத்துவத்தோடு தொலைக்காட்சிகள் கொண்டாடுகின்றன. அல்லது கொண்டாடுகிற பெயரில் காசு பார்க்கின்றன. குறிப்பாக விஜய் டி.வி.

ரஜினி பிறந்த நாளில் அவருக்கு பல பிரபலங்கள் வாழ்த்து சொல்வதைப் பார்த்திருக்கிறோம். இதற்காக சினிமா நட்சத்திரங்களைத் தேடிச் சென்று, ரஜினியை வாழ்த்தி ‘பைட்’ (பேட்டி) கொடுங்கள் என்று கேட்கிறார்கள்.

அப்படி கேட்கும்போது, பல நட்சத்திரங்கள் பேட்டி தர மறுப்பதோடு அடிக்காத குறையாக கடுப்படித்து விரட்டுகிறார்கள். சிலர் ரஜினியையே தரக்குறைவாக பேசுகிறார்கள்.

கடந்த வருடம் ரஜினி பிறந்தநாளுக்கு நடிகர் ஜீவாவிடம் பேட்டி கேட்டது ஒரு தொலைக்காட்சி.

அதற்கு ஜீவா என்ன சொன்னார் தெரியுமா?

”நான் எதுக்கு ஸார்.. அவரை வாழ்த்தி பேட்டி கொடுக்கணும்? என்னோட பிறந்த நாளுக்கு அவர் என்னை வாழ்த்தி பேட்டி கொடுப்பாரா? என்னை வாழ்த்தி அவருகிட்டேருந்து ஒரு பேட்டியை வாங்கிட்டு வாங்க. அப்புறமா நான் அவரை வாழ்த்தி பேட்டி தர்றேன்.”

இப்படியொரு பதிலை ஜீவாவிடமிருந்து எதிர்பாராத அந்தத் தொலைக்காட்சியினர் ஏமாற்றத்தோடு திரும்பினர்.

கடந்த வருடம் ஜீவா சொன்னது போலவே, இந்த வருடம் சுஹாசினியும் ரஜினியை வாழ்த்தி பேட்டி கேட்ட தொலைக்காட்சியை ஏறக்குறைய அதே வார்த்தைகளில் கடுப்படித்திருக்கிறார்.

ரஜினிக்கு புகழ் சேர்ப்பதாக நினைத்துக் கொண்டு அவருக்கு அவமானத்தையும், அவமரியாதையையும் தேடிக் கொடுக்கின்றன தொலைக்காட்சிகள்.

மிஸ்டர்..ரஜினி..காதில விழுதா?

Tags: , ,

Leave a Reply