ராஜீவ்காந்தி கொலை வழக்கு: பேரறிவாளனின் மனு தள்ளுபடி

perarivalanராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாக பல்நோக்கு விசாரணை முகமையை கண்காணிக்கக் கோரிய தூக்கு தண்டனை கைதி பேரறிவாளனின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெறப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் தாக்கல் செய்த மனு விவரம்:

ராஜீவ்காந்தி கொலை வழக்கின் பின்னணியில் உள்ள சதித் திட்டங்களை விசாரணை செய்வதற்காக சிபிஐயின் சிறப்பு புலனாய்வு கண்காணிப்புக் குழு நியமிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணை கால தாமதமாக நடைபெறுவதால் நான் பாதிக்கப்பட்டு வருகிறேன்.

சிபிஐ நடத்தும் இந்த விசாரணை முறையாக நடைபெற்றால் இந்த சதித் திட்டத்தின் பின்னணியில் உள்ள அனைத்து உண்மைகளும் வெளியே வரும்.

இது தவிர, பெயர் குறிப்பிடாத சில அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு இதில் தொடர்பு இருப்பதால் விசாரணை சரியாக நடைபெறவில்லை.

விசாரணை செய்யப்படாதவர்களை விசாரணை செய்ய வேண்டும். பல்நோக்கு விசாரணை முகமையை நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

இந்த மனு, முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி என்.தண்டபாணி முன்பு செவ்வாய்க்கிழமை (டிச.10) விசாரணைக்கு வந்தது. அதை நீதிபதி விசாரித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags: , ,

Leave a Reply