தேதியும் இல்லை; தியேட்டரும் இல்லை : ‘பிரியாணி’யில் நடக்கும் கடைசிக்கட்ட களேபரங்கள்!

karthi20-ஆம் தேதி ‘பிரியாணி’ கண்டிப்பாக ரிலீஸாகி விடும் என்பது தான் கடந்த வாரம் வரை ஸ்டூடியோ க்ரீன் எடுத்து வைத்த திடமான முடிவு.

ஆனால் கடந்த 2 நாட்களாக அதி விரைவில்… அதி விரைவில்… என்று ‘கோச்சடையான்’ லிஸ்ட்டில் சேர்ந்த கதையாகிப் போனதில் ரசிகர்களுக்கு எக்கச்சக்க குழப்பம். மீடியாக்களும் ஒருபடி மேலேபோய் ‘பிரியாணி’ ரிலீஸாகாது என்று புதுச் செய்தியை எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் உண்மை நிலவரம் வேறு மாதிரியாக இருக்கிறது.

இன்னும் 10 நாட்களே இருக்கின்ற நிலையில் ‘பிரியாணி’ விளம்பரங்களில் தியேட்டர்களை மட்டும் அறிவிக்காததன் மர்மம் என்ன? எல்லாமே ‘அழகுராஜா’ கொடுத்த அட்டர் ப்ளாப் அலுப்பு தான் மெயின் காரணமாம்.

செட்டாகாத பிகரை உஷார் பண்ண நெனைக்கிறதும், ஃபிட்டாகாத கேரக்டரின் நடித்து கெட்ட பெயரை சம்பாதிப்பதும் ஒண்ணு தான். அப்படி ஒரு மோசமான சூழலுக்குள் தான் சிக்கித் தவிக்கிறார் ஹீரோ கார்த்தி.

அதிலும் அவர் நடிப்பில் கடைசியாக ரிலீசான ‘அழகுராஜா’ படம் நம்பி வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு பெருத்த நஷ்டத்தை தந்ததால் ‘பிரியாணி’ படத்துக்கு எதிராக அவர்கள் போர்க்கொடி தூக்க ஆரம்பித்து விட்டார்கள். அழகுராஜாவின் நஷ்டத்தை கொடுத்தால் தான் ‘பிரியாணி’யை ரிலீஸ் செய்ய விடுவோம் இல்லையென்றால் கஷ்டம் என்று கை விரித்து விட்டார்கள்.

இதனால் டென்ஷனாக தயாரிப்பு தரப்பு போர்க்கொடி தூக்கிய விநியோகஸ்தர்களை நேரில் அழைத்து பேரமெல்லாம் பேசியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அந்த பேரத்துக்கு ஒத்து வரததால் இப்போது பிரியாணியை ரசிகர்களுக்கு நேரடியாகவே பரிமாற முடிவெடுத்திருக்கிறார்கள். அதாவது தமிழ்நாட்டின் எல்லா ஏரியாக்களிலும் பிரியாணியை சொந்தமாக ரிலீஸ் செய்யப் போகிறதாம் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம்.

அதனால் தான் கடந்த 2 நாட்களாக ‘அதிவிரைவில்…’ என்ற டைட்டிலுடன் தியேட்டர்களின் பெயர்கள் இல்லாமலேயே ‘பிரியாணி’ பட விளம்பரங்கள் வெளியாகியிருக்கிறது. மற்றபடி படம் 20-ஆம் ரிலீஸ் ஆவதில் எந்த மாற்றமும் இல்லை என்பதே இந்த நிமிஷம் வரை உள்ள உண்மைநிலை.

Tags: , ,

Leave a Reply