தங்கத்தைவிட இன்று தண்ணீருக்குத் தான் அதிகம் மதிப் புள்ளது. ஏன் விடுதலைப் புலிகள் கூட இராணுவ முகாம்களைத் தாக்குவதற்கு முன்னர் நீர்த் தாங்கிகளையே தாக்கி அழித்தனர்.
அந்தளவுக்கு நீர் முக்கிய மானதாகும் என்று சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்தார். நாடாளுமன்றில் நடைபெற்ற நீர்வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரை யாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது
விவசாய உற்பத்திகளுக்கு உரம், இரசா யனம், கிருமிநா சினி ஆகியவற்றைக் கூடுதலாகப் பயன்படுத்துவதும் சிறு நீரக நோய் அதிகரிப்புக்குக் காரணமாக அமைகிறது.
எனவே, இது தொடர்பில் விவசாயிகளுக்குத் தெளிவுபடுத்து வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும்.
அரபு நாடுகளில் எண்ணெய் வளம் இருந்தாலும் அங்கு நீர் பற்றாக்குறை நிலவுவதால் மக்கள் மென்பானங்களையே அருந்துகின்றனர். எனவே, இந்த நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு விவசாயிகளுக்குத் தெளிவுபடுத்தல் அவசியம்.
அதற்காக ஒரு குழு நியமிக்கப்படல் அவசியமாகும் என்றார்.
















