கருத்தடை செய்த தாயாரின் உயிரிழப்புக்கு சுகாதார வளப் பற்றாக்குறையும் காரணம்; மாகாண சுகாதார அமைச்சர்

deadகிளிநொச்சியில் கருத்தடை செய்து கொண்ட தாயார் ஒரு வர் உயிரிழந்த சம்பவத்துக்கு எங்களது வளப்பற்றாக்குறையும் ஒரு காரணமாக இருப்பதாகத் தெரிவித்த சுகாதார அமைச்சர், இது தொடர்பில் கிளிநொச்சி சுகாதாரப் பணிமனையின் முழுமையான அறிக்கை கிடைத்த பின்னர் விளக்கம் அளிப்பதாகக் கூறினார்.

வடக்கு மாகாணசபையின் வரவு செலவுத் திட்டத்தின் சுகாதார அமைச்சு மீதான விவாதத்தில் ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தினால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:
கிளிநொச்சியில் கருத்தடை செய்து கொண்ட 50 தாய்மார் களில் கடந்த மாதம் 26 வய தான தயார் ஒருவர் உயிரி ழந்திருந்தார். அவர் கர்ப்பந்தரித்த நிலையில் கருத்தடை செய்யப்பட்டமை இதன் பின்னர் தெரியவந்தது.

குறித்த தாயாரின் பதிவுகள் தவறாக இருக்கின்றன. கருத்தடை செய்வதற்கு முன்பாக அவருடன் மருத்துவ மாது கதைத்த போது, கடைசியாக மாதவிடாய் வந்த திகதி ஓகஸ்ட் 28 ஆம் திகதி என்று கூறியுள்ளார். 9 ஆவது நாள் அவர் கருத்தடை செய்துள்ளார். இதில் எந்தப் பிழையும் இல்லை.

ஆனால் இதன் பின்னர் அவர் வைத்தியசாலைக்கு வயிற்று நோ காரணமாகச் சென்றுள்ளார். இதன் போது அவர் ஸ்கான் செய்யப்பட்ட போது வயிற்றில் கரு இருந்தது தெரியவந்தது. அவர் கர்ப்பிணி என்று அறிந்த பின்னர் கர்ப்பிணிகள் சேவை நிலையத்தில் பதிவுகள் செய்துள்ளார்.

அப்போது அவர் கடைசியாக மாதவிடாய் வந்த திகதி ஜுலை மாதம் 28 ஆம் திகதி என்று குறிப்பிட்டுள்ளார். இதனை வைத்துப் பார்க்கும் போது கர்ப்பகாலம் சரியாகப் பொருந்துகின்றது. தவறுக்கு உயிரிழந்த அந்தப் பெண்ணும் பொறுப்பு.

சிறுநீர்ப் பரிசோதனை செய்யாமலா கருத்தடை செய்து கொள்ளப்பட்டது என்று சிலர் என்னிடம் கேட்டார்கள். எங்களிடம் வளங்கள் பற்றாக் குறையாக இருக்கின்றன. இதனால் அது செய்யப்படவில்லை.

இதனை விட உயிரிழந்த அந்த தாயார் முன்னரும் கருத்தடை மாத்திரை பயன் படுத்தி வருபவர்.அவர் அதனை ஒழுங்காகப் பயன்படுத்தாமையினாலேயே கருத்தரித்துள்ளார். எனவே அவருக்குக் கருத்தடை ஒன்றும் புதிதல்ல. இருப்பினும் நாம் கிளிநொச்சி சுகாதார சேவைகள் திணைக்களத்திடம் விளக்கம் கோரியுள்ளோம். அவை கிடைத்த பின்னர் அதனை இந்தச் சபைக்குத் தெரியப்படுத்துவோம் என்றார்.

Tags: ,

Leave a Reply