செவ்வாய் கிழமையன்று நடைபெற்ற நெல்சன் மண்டேலாவின் நினைவாஞ்சலிக் கூட்டத்தில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பேச்சை, அதே மேடையில் இருந்தபடி சைகை மொழியால் விளக்கிய நபர் உபயோகப்படுத்திய சைகைகள் சரியானவையா என்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
காது கேட்காத பல நபர்கள், இந்தச் சைகை மொழியானது அங்கீகரிக்கப்பட்ட வடிவில் இல்லை என்றும், சில சமயங்களில் அது அர்த்தமற்றதாக இருந்தது என்றும் கூறியுள்ளனர்.
உலகில் உள்ள காது கேளாதோர் சங்கங்களால் பயன்படுத்தப்படாத பல சைகைகளை, சைகை மொழி பெயர்பாளர் உபயோகப்படுத்தியதாக தென் ஆப்பிரிக்க காது கேளாதோர் சங்கத்தின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
பல மேற்கத்திய நாடுகளில் சைகை மொழி பெயர்ப்பாளர்கள் பொது நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படுகின்றனர்.
















