பல வெற்றிப் படங்களை இயக்கிய வி.சேகர் அவர்களின் மகன் காரல் மார்க்ஸ் கதாநாயகனாக நடிக்கும் சரவண பொய்கை படத்தின் இசை வெளியீட்டு விழா வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் நடை பெற்றது.
விழாவில் இயக்குனர்கள் பாரதிராஜா,கே.பாக்யராஜ் ,கே.எஸ்.ரவிகுமார்,விக்ரமன், ஆர்.வி.உதயகுமார், ஆர்.கே.செல்வமணி, பி.வாசு, எழில், தங்கர்பச்சான், ஈ.ராமதாஸ், பி.ஜி.சுரேந்திரன், ஷண்முகசுந்தரம் , நடிகர்கள் ராதாரவி, விவேக், கருணாஸ், விஜய்சிரஞ்சீவி, தயாரிப்பாளர்கள் கே.ஆர் , எஸ்.எஸ்.துரைராஜ்,கே.ராஜன், திருப்பூர் பாயிண்ட் நடராஜன், வி.உஷாராணி, விஜயமுரளி, ராதாகிருஷ்ணன் ஆகியோர் பட குழுவினரை பாராட்டி பேசினார்கள்.
இந்த விழாவில் பட அதிபர் கே.ராஜன் பேசும்போது சமீபத்தில் சென்சாருக்காக நான்கு படங்களை பார்த்தேன் அதில் மூன்று படங்களில் உள்ள வசனங்கள் காட்சிகள் அருவருக்க தக்க வகையில் இருந்தன. சில இயக்குனர்கள் அந்த காட்சிகளை விட்டு விடுங்கள் என்று கெஞ்சினார்கள்.
நீங்கள் ஏன் சென்சாரிடம் கெஞ்சவேண்டும். படம் எடுப்பது உங்கள் தொழில். சென்சார் சான்றிதழ் தர வேண்டியது அவர்களது கடமை. நீங்கள் நல்ல படம் எடுங்கள் யாரையும் கெஞ்ச தேவையில்லை அவர்களே உங்களுக்கு “யு” சான்றிதழ் தந்து விடுவார்கள் என்று பேசினார்.
தயாரிப்பாளர் சங்க தலைவர் கே.ஆர். பேசும்போது எவ்வளவோ படங்கள் முடிந்து ஆடம்பரமாக இசை வெளியீட்டு விழாவை நடத்திவிடுகிரார்கள் நாங்களும் வந்து வாழ்த்திவிட்டு போகிறோம் ஆனால் நிறைய படங்கள் வெளிவருவதே இல்லை இது எங்களுக்கு வருத்தமான விஷயமாக இருக்கிறது என்றார்.
நடிகர் கருணாஸ் பேசும் போது.. இந்த படத்தை எடுக்கும் போது இருந்த துணிச்சல் வி.சேகர் அவர்களுக்கு ரிலீஸ் செய்யும் போதும் இருக்க வேண்டும் யாரும் உதவி செய்வார்கள் என்று எதிர் பார்க்க கூடாது யாருமே உதவ மாட்டார்கள் என்பதுதான் நிச்சயமான உண்மை என்றார்.
மற்றும் படத்தின் தயாரிப்பாளர்கள் கே.பார்த்திபன், எஸ்.தமிழ்ச்செல்வி மற்றும் படத்தின் இயக்குனர் வி.சேகர், நாயகன் காரல்மார்க்ஸ் ஆகியோர் வருகை தந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்கள்
















