சாபத்தை சம்பாதித்த சகாப்தம் படத்துவக்கவிழா! விஜயகாந்த் மீது பொதுமக்கள் கோபம்

sakapthamவிஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகும் சகாப்தம் படத்தின் துவக்கவிழா, சென்னை, சாலிகிராமதில் உள்ள விஜயகாந்தின் வீட்டில் நடந்தது. வீடு என்றால்..வீட்டில் இல்லை, விஜயகாந்தின் வீடு இருக்கும் கண்ணம்மாள் தெருவிலேயே நடந்தது.

இதற்காக கண்ணம்மாள் தெருவையே சீல் வைத்துவிட்டதோடு, நடுத்தெருவிலேயே மேடை போட்டிருந்தனர்.

தெருவின் இரண்டு பக்கமும் சஃபாரி போட்ட குண்டர்களை…ஸாரி..தொண்டர்களை நிறுத்தி வைத்து, அந்தத் தெருவில் குடியிருப்பவர்களையே உள்ளேவிடாமல் மடக்கினர்.

மீறி உள்ளே நுழைய முயன்றவர்களிடம் தகராறு செய்தனர்.

இதனால் அந்த ஏரியாவில் குடியிருப்பவர்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்ததோடு, சகாப்தம் படத்துக்கு எதிராக சாபமேவிட்டனர்.

இன்னொரு பக்கம், விஜயகாந்தின் கட்சித்தொண்டர்களும், மீடியாக்களும், சினிமாக்காரர்களும் வந்த வாகனங்கள் அந்த ஏரியாவில் சகட்டுமேனிக்கு நிறுத்தப்பட்டன.

அதனால் வீட்டுக்குள்ளிருந்து தங்களது வாகனங்களை வெளியே எடுக்க முடியாமல் பலரும் சிரமப்பட்டனர்.

தவிர அந்த ஏரியாவே கடுமையான ட்ராபிக் ஜாமில் திணறியது.

பல ஆயிரம் கோடி பணம் வைத்திருக்கும் விஜயகாந்த் தன் மகனின் புதுப்பட பூஜையை ஏதாவது சினிமா ஸ்டுடியோவிலோ அல்லது தன் கட்சி அலுவலகத்திலோ வைத்திருக்கலாமே…

பொதுமக்களை இம்சைப்படுத்தி இப்படியா பொது இடத்தை ஆக்ரமித்து விழா நடத்துவது? என்று பொதுமக்கள் ஆவேசப்பட்டனர்.

முதல்வர் பதவிக்கு ஆசைப்படும் விஜயகாந்த் மக்களின் மனசை புரிஞ்சு நடந்துக்கணும்..!

Tags: , ,

Leave a Reply