இந்திய மத்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா அதிருப்தி வெளியிட்டுள்ளார். இலங்கைக் கடற்படையினர் இந்திய மீனவர்களை தொடர்ச்சியாக கைது செய்து வருவதாகவும் இது தொடர்பில் மத்திய அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர் பிரச்சினை குறித்து பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நேரடியாக பேச வேண்டுமென ஜெயலலிதா கோரியுள்ளார். இலங்கைக் கடற்படையினர் பாரியளவிலான மீனவர்களை கூட்டாக கடத்திச் சென்றுள்ளதாகவும் கடத்தல் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
யுத்ததத்திற்கு நிகரான இவ்வாறான நடவடிக்கைகள் இலங்கை அரசாங்கத்தின் அனுமதியின்றி கடற்படையினரால் மேற்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறான நடவடிக்கைகளினால் இந்தியாவின் நன்மதிப்பு பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அப்பாவி தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு இந்திய மத்திய அரசாங்கம் தீர்வு வழங்கும் என்ற நம்பிக்கை வலுவிழந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகரை அழைத்து கடுமையான எதிர்ப்பை வெளியிட மத்திய அசராங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜெயலலி;தா வலியுறுத்தியுள்ளார்.
















