‘வீரம்’ ஹிட்டுக்காக மொட்டை போட்ட அஜித்!

ajith-mottaiஎந்த ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் தன்னை முன் மாதிரியாக எல்லோரும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில் கவனமாக இருப்பவர் நடிகர் அஜித்.

அதனால் தான் எல்லா முன்னணி ஹீரோக்களும் ஒரு நிமிட விளம்பரப் படங்களில் கூட தலைகாட்டி விட்டு கோடி கோடியாக சம்பாதிக்கும் போது அஜித் மட்டும் இன்னும் அந்த ஏரியாவுக்குள் செல்லவில்லை.

அதேபோல தங்கள் அபிமான ஹீரோவின் படம் வெற்றிபெற அவரது ரசிகர்கள் காவடி தூக்குவது, மொட்டை போடுவது, நாக்கில் அலகு குத்திக் கொள்வது என்று பலதரப்பட்ட வேண்டுதல்களைச் செய்வார்கள்.

ஆனால் நடிகர் அஜித்தோ இந்த விஷயத்திலும் தனது ரசிகர்களுக்கு கஷ்டத்தைக் கொடுக்காமல் தானே திருப்பதிக்கு போய் மொட்டை போட்டு வந்திருக்கிறார்.

அஜித்தின் மொட்டை கெட்டப்பை இதுவரை யாருமே பார்த்ததில்லை. அப்படிப்பட்டவர் தனது ஹீரோ இமேஜையெல்லா தூக்கி தூர எரிந்து விட்டு கொஞ்சமும் யோசிக்காமல் மொட்டை போட்டிருப்பது அவரது ரசிகர்களை இன்னும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.

‘ஆரம்பம்’ படத்தைப் போலவே ‘வீரம்’ படமும் வெற்றி பெற வேண்டும் என்றும் இந்தப்படத்தின் ஷூட்டிங் நல்லபடியாக முடிய வேண்டும் என்று ஏற்கனவே வேண்டியிருந்தாராம் அஜித். அதனால் தான் பொங்கலுக்கு ‘வீரம்’ ரிலீசாக உள்ள நிலையில் தனது வேண்டுதலை திருப்பதி கோவிலில் நிறைவேற்றி வந்துள்ளார் அஜித்.

அஜித் படப்பிடிப்புக்காக அடிக்கடி ஆந்திரா சென்று வந்தாலும் இந்த முறைதான் மொட்டை போட்டுவிட்டு வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவருடன் டைரக்டர் சிறுத்தை சிவாவும் மொட்டை பொட்டிருக்கிறார். அவரின் இந்த மொட்டை கெட்டப்பை பார்க்கும் ரசிகர்கள் இது எந்தப் படத்துக்கான கெட்டப்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

Tags: , ,

Leave a Reply