வடிவேலு மீது திரையுலகில் பலருக்கும் கோபம். மனசுக்குள் மண்ணை வாரித்தூற்றாத ஆட்களே இல்லை.
பட வாய்ப்பு இல்லாமல் அவர் வீட்டில் உட்கார நேர்ந்தபோது நண்பர்களுக்கு சரக்கு வாங்கிக் கொடுத்து சந்தோஷப்பட்டவர்கள் பலர். ஆனாலும் பழகிய தோஷத்துக்காக வடிவேலு பற்றி யாரும் வாய் திறப்பதில்லை.
ராம் படத்தில் அறிமுகமான சிரிப்பு நடிகரான கஞ்சாகருப்புவுக்கு யார் கொடுத்த தைரியமோ தெரியவில்லை.
பகிரங்கமாக வடிவேலுவை நக்கலடித்து வசனம் பேசி நடித்திருக்கிறார்.
இன்று வெளியான கோலாகலம் படத்தில் கஞ்சா கருப்புதான் காமெடியன். அந்தப் படத்தில் ஒரு காட்சியில் ரிஸ்க் எடுப்பது எனக்கு ரஸ்க் சாப்பிடுவது மாதிரி என்று வசனம் பேசுகிறார் ஹீரோ.
அதற்கு இப்படி சொன்னவன் எல்லாம் இப்ப எங்க இருக்கான்னே தெரியலை என்று வசனம் பேசுகிறார் கஞ்சாகருப்பு.
மருதமலை படத்தில் வடிவேலதான் ரிஸ்க்…ரஸ்க்…வசனம் பேசி இருப்பார்.
ஆக கஞ்சா கருப்பு நக்கலடித்திருப்பது வடிவேலுவைத்தான்.
அவர் மீது இவருக்கு என்ன கோபம்?
அட இது தெரியாதா…வடிவேலுதான் என் ஒரே எதிரி..அவரை ஒழிக்காமல் விட மாட்டேன்னு கருப்பு அண்ணன் அடிக்கடி சொல்வாரே என்கிறார்கள் அவரது அடிபொடிகள்.
















