ரஜினியும், கமலும் ஏன் சேர்ந்து நடிப்பதில்லை?

rajini-kamal1ஊருக்கு ஊர் தெருக்கோடி இருப்பதைப் போலவே தமிழ்சினிமால் கோடிகளில் சம்பளம் வாங்கும் ஹீரோக்களும் இருக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் ஓஹோ என்றிருந்த இவர்களின் மார்க்கெட் பல ஆண்டுகள் கழித்தும் கூட ஆஹா… என்று ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு ஸ்டெடியாக இருப்பது தான் அவர்கள் திறைமைக்கு கிடைத்த வெகுமதி.

அதில் நடிகர் கமலும், ரஜினியும் இப்போதும் ‘கோடி’களில் சம்பளம் வாங்கும் ஹீரோக்களின் லிஸ்ட்டில் தான் இருக்கிறார்கள். அது நேற்று நடந்த ஒரு விழாவில் கமல் பேசிய பேச்சிலிருந்தே தெரிந்தது.

நேற்று ஆரம்பமான 11-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட கமலிடம் நடிகர்கள் சூர்யா, பார்த்திபன், இயக்குனர் பாலுமகேந்திரா, இசையமைப்பாளர் இளையராஜா, பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகியோர் கேட்ட கேள்விகளை சுஹாசினி மேடையில் படிக்க அவற்றிற்கு கமல்ஹாசன் பதிலளித்தார்.

அவற்றில் ஒரு கேள்வியாக “இந்திய சினிமா நூற்றாண்டின் மிகச் சிறந்த பரிசாக நீங்களும், ரஜினிகாந்தும் இணைந்து நடிப்பீர்களா ? ” என்ற கேள்வியை கமலிடம் முன் வைத்தார் சுஹாசினி.

அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், “ நாங்கள் சேர்ந்து நடிப்பது உங்களுக்கு பரிசு என்றால் எங்களுக்கு பரிசு யார் தருவது? அதாவது நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து நடித்தால் சம்பளத்தை கொடுத்து விட்டு பிறகு படம் எடுப்பதற்கு பணத்துக்கு எங்கே போவது? எங்கள் இரண்டு பேரையும் வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் இருக்கிறார்களா.? என்று தெரியவில்லை.

இதனால் தான் நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து நடிக்காமல் இருக்கிறோம். வேண்டுமானால் இலவசமாக நடிக்கலாம். அது எங்களுக்கு வசதி வந்தவுடன் தான் சாத்தியப்படும். அப்படி இருக்கும் பட்சத்தில் நான் ரெடியாக இருக்கிறேன், ரஜினி தயாராக இருக்கிறாரா என்று அவரிடம் தான் கேட்க வேண்டும் என்றார் கமல்.

ஒருவேளை அப்படி இருவரும் இணைந்து நடித்தால் இந்த நூற்றாண்டு மட்டுமல்ல எந்த நூற்றாண்டிலும் அந்தப்படம் பேசப்படும் படமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Tags: ,

Leave a Reply