விடுதலைப் புலிகளை மீண்டும் ரகசியமாக உருவாக்கும் திட்டத்தில் இலங்கை அரசாங்கம் இறங்கியுள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது. என லங்கா வெப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தத்திட்டம் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ச தலைமையில் மிகமிக இரகசியமாக நடைபெற்று வருவதாகவும் புலிகளின் மீள் உருவாக்கம் தொடர்பாக இந்த அரசாங்கத்தின் இரகசியத்திட்டம் எந்த அரசாங்க அதிகாரிகளுக்கோ அரசியல்வாதிகளுக்கோ முப்படைத் படைத் தளபதிக்கோ தெரியாமல் நடைபெற்று வருகின்றது.
புலிகளின் முன்னாள் திருகோணமலை மாவட்டத்தளபதியாக இருந்த பதுமன் இராணுவத்திடம் புனர்வாழ்வு என்ற பெயரில் இருந்து தற்போது விடுவிக்கப்பட்டவர். அவரை வைத்தே மேற்படி இயக்கத்தை உருவாக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத்தின் அணுசரனையில் ஆரம்பிக்கப்படும் இயக்கத்தின் முதல் திட்டம் முன்னணி தமிழ் அரசியல் தலைவர்களை கொலை செய்வதாகும். என லங்கா வெப் நியூஸ் மேலும் தெரிவித்துள்ளது.
நன்றாக தமிழ் பேசக்கூடிய இராணுவத்தினரை பயன்படுத்தி இவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுவருவதாக லங்கா வெப் நியூஸ் மேலும் தெரிவித்துள்ளது.
















