பாண்டிச்சேரின்னா தான் நல்ல சரக்கு கெடைக்குங்கிறதும், கேரளான்னா தான் பொண்ணுங்க நடிக்க வருவாங்கங்கிறதும் தமிழ்நாட்டோட சாபக்கேடா மாறிப்போச்சு…
வருஷத்துக்கு 150 படங்கள் ரிலீஸ் ஆச்சுன்னா அதுல 100 படங்கள்ல கேரளா ஹீரோயின்களோட ஆதிக்கமும் மீதி 50 படங்கள்ல மும்பை, டெல்லி போன்ற நார்த் ஸ்டேட்ஸ்ல உள்ள ஹீரோயின்களோட ஆதிக்கமும் தான் இருக்கு.
எடுக்கிறது தமிழ்ப்படம் ஆனா அதுல தமிழ்நாட்டு பொண்ணுங்களை ஹீரோயினாப் பார்க்கிறது ரொம்ப கஷ்டமான விஷயமா இருக்கு. ஏன் தமிழ்ப்படங்களில் தமிழ்நாட்டுப் பொண்ணுங்க நடிக்க வர்றதில்ல என்ற கேள்வி எல்லாருடைய மனசுக்குள்ள பெவிகால் மாதிரி ஒட்டிக்கிட்டு இருந்தாலும் அதை வெளிப்படைய கேட்கிறதுமே கொறஞ்சுப்போச்சு.
ஆனா நேத்தி அப்படியொரு கேள்வியைக் கேட்டு புதுமுக டைரக்டர் ஒருவருக்கு பீதியை கிளப்பினார் சீனியர் நிருபர் ஒருவர்.
கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் ‘நேர் எதிர்’ என்ற படத்தின் பிரஸ்மீட் நடைபெற்றது.
பிரஸ்மீட்டில் பேசிய படத்தின் டைரக்டர் ஜெயபிரதீப் இந்தப்படம் ஒரு த்ரில்லர் படம்கிறதுனால படத்துக்கு ரெண்டே ரெண்டு பாட்டை தான் சேர்ந்திருக்கேன். ஆனா ஆடியோ சிடியில 5 பாட்டுகள் இருக்கும். ஏன்னா அந்த ரெண்டு பாட்டும் கதையோட சேர்ந்து வர்றதுனால தான் அதை தவிர்க்க முடியல என்றார்.
அப்போது இந்தப் படத்தோட ஹீரோயின் யாரு..? மும்பை பொண்ணா என்று சீனியர் நிருபர் கேட்க, இல்ல சார் இவங்க கேரளாவை சேர்ந்தவங்க ஏற்கனவே தமிழ்ல ‘அகிலன்’, ‘ஆறாவது வனம்’னு நாலைஞ்சு படங்கள்ல நடிச்சிருக்காங்க… என்றவரிடம் ஏன் எப்போ பார்த்தாலும் கேரளா, மும்பைன்னு மத்த ஸ்டேட்ல இருந்தே ஹீரோயின்களை கூப்பிடுறீங்க..? ஏன் தமிழ்நாட்டுல ஹீரோயின்களே இல்லையா? என்று கேட்க அதற்கு “ இல்ல தமிழ்ப் பொண்ணுங்க யாருமே நடிக்க வரமாட்டேங்கிறாங்க..? என்றார் டைரக்டர்.
உடனே “ ஏன் வரமாட்டேங்கிறாங்க.., நீங்க தமிழ்ப்பொண்ணுங்களை நடிக்கத் தானே கூப்பிடுவீங்க…?” என்று கிடுக்குப் பிடி கேள்வியைக் கேட்டுத் தொலைக்க இந்தக் கேள்வியை சற்றும் எதிர்பாராத டைரக்டர் “ சார்… நெஜமாலுமே நடிக்கத் தான் சார் கூப்பிடுவோம், மத்தபடி நீங்க நெனைக்கிற மாதிரி எதுவுமே இல்ல சார்..” என்று சிரித்துக் கொண்டே சமாளித்தார்.
அப்புறம் எதுக்கு தமிழ்ப்பொண்ணுங்க சினிமாவுக்குள்ள வர மாட்டேங்கிறாங்க..? யோசிக்க வேண்டிய விஷயம் தான்.
















