பிரதமர் டி.எம். ஜயரத்னவைப் பதவியிலிருந்து வெளியேற்றி வேறொருவரை அந்தப் பதவியில் அமர்த்த நடக்கும் சதியிலிருந்து அவரைப் பாதுகாக்க எதிர்க்கட்சியினரான நாம் முன்னிற்போம் என ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிதித்திட்ட அமைச்சின் மீதான வரவு – செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:
சபை விவாதத்தில் உரையாற்றிய பெரும்பாலான அமைச்சர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவச் சபை மற்றும் கட்சியின் ஆட்சிநிலை குறித்தே பேசினார்கள்.
வரவு செலவுத்திட்ட சாதக, பாதகங்கள் பற்றிப் பேசவில்லை. ஐ.தே.கவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கல்விமான்கள் நாம் தூணம் பேசுபவர்களை தேசிய பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆக்கவில்லை.
இலங்கையை விட விசாலமான நாடுகளில் 103 அமைச்சர்கள் உள்ள நிலையில் இங்கு 106 அமைச்சர்கள் உள்ளனர்.
இந்நிலையில் போதைவஸ்து கார்ப்பந்தயம், மதுப்பாவனை, கசினோ போன்றன நாட்டின் நிலையை குழப்புவதாக உள்ளன. போதைவஸ்து விவகாரத்தில் சிக்கியுள்ள பிரதமரை பலமாக்க ஐ.தே.க நடவடிக்கை எடுக்கும் – என்றார்.
















