மாகாணசபைக்கான இடையூறுகள் பொங்கலோடு நீங்க வேண்டும்; இல்லாவிட்டால் வேறுவிதமான நடவடிக்கை என்கிறார் சம்பந்தன்

sambanthan_tnasamவடக்கு மாகாணசபையை செயற்படுத்துவதில் ஏற்படுத்தப்படுகின்ற நிர்வாகரீதியான முட்டுக்கட்டைகள் எதிர்வரும் தைப்பொங்கலுக்கு முன்னதாக நீக்கப்படும். அவ்வாறு நீக்கப்படாவிட்டால் வேறுவிதமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியிருக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரசபை மண்டபத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு, கிழக்கு
மாகாணசபை நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்களின் கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் நடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் விநோனோதராதலிங்கம் ஆகியோரும் மாகாணசபை உறுப்பினர்களில் கே.சயந்தன், ச.சுகிர்தன், விந்தன் கனகரட்ணம், பிறிமுஸ் சிராய்வா, க.குணசீலன் ஆகியோரும் கலந்து கொள்ளவில்லை.

சுமார் 8 மணிநேரம் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது. வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளை ஆக்கிரமித்திருக்கும் இராணுவம் வெளியேற்றப்படுவது தொடர்பிலும், வலி. வடக்கு மற்றும் சம்பூர் மீள்குடியமர்வு நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது வடக்கு மாகாண சபை உறுப்பினர்களால், மாகாணசபை நடத்துவதில் ஏற்படுத்தப்படும் நிர்வாக ரீதியி லான முட்டுக்கட்டைகள் மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்பின்மை தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது.

இதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், “மேற்படி விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அவர் சாதகமாகப் பரிசீலிப்பதாகக் கூறியுள்ளார். எதிர்வரும் தைபொங்கலுக்கு முன்னர் நல்ல முடிவு கிடைக்கும். அவ்வாறு கிடைக்காவிட்டால் வேறுவிதமான நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டியிருக்கும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: ,

Leave a Reply