ஐ.நா மனித உரிமை பேரவை அமர்வுகளை இலக்கு வைத்து செனல்4 ஆவணப்படம் வெளியிட்டுள்ளது – இராணுவம்

lk-armyஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளை இலக்கு வைத்தே பிரித்தானியாவின் செனல்4 ஊடகம் ஆவணப்படமொன்றை வெளியிட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட உள்ள தீர்மானத்தை வலுப்பெறச் செய்யும் நோக்கில் செனல்4 ஊடகம் புதிய ஆவணப்படங்களை வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

செனல்4 ஊடகம் வெளியிட்டுள்ள புதிய ஆவணம் போலியானது என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.

கடந்த மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது செனல்4 இவ்வாறு ஆவணப்படங்களை வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் யுத்தக் குற்றச் செயல்கள் இடம்பெற்றதாக நிரூபிப்பதே இந்த ஆவணப்படத்தின் நோக்கமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்

Tags: , , ,

Leave a Reply