இலங்கையில் மீண்டும் விடுதலை புரட்சிக்கு புத்துயிரூட்ட முயற்சிப்பதாக தகவல் கிடைத்ததன் பேரில், இலங்கை அரசு கடந்த வாரம் விடுதலை புலிகள் இயக்கம் மற்றும் 15 தமிழ் அமைப்புகளுக்கு தடை விதித்தது.
அவர்களுடன் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் இலங்கை நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தது.
தடை செய்யப்பட்ட அமைப்புகளில் உள்ள 422 நபர்களின் பட்டியல் இலங்கை அரசிதழில் வெளியிட்டது.
அவர்களில் 32 பேர் தற்போது இந்தியாவில் வசிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. 32 பேர்களில் 6 பேரின் இந்திய முகவரி மட்டுமே அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பட்டியலில் உள்ள மற்றவர்கள் தற்போது அவுஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, மலேசியா, நெதர்லாந்து, நார்வே, சுவிட்சர்லாந்து, தாய்லாந்து, இங்கிலாந்து மற்றும் இலங்கையில் வசிக்கிறார்கள்.
அவர்கள் அனைவரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களை கைது செய்ய சர்வதேச போலீசாருக்கு ஏற்கனவே அறிக்கை அனுப்பப்பட்டு விட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் அல்லது குழுக்களை தற்போது தடை செய்யப்பட்டவர்களாக கருத முடியாது.
இதுதொடர்பாக இலங்கை அரசு பாராளுமன்றத்தில், அவர்களை தடை செய்ய சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்றும் இலங்கை அதிகாரி ஒருவர் கூறினார்.
















