மனித உரிமை நிலைமைகள் குறித்து சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்படுவதனை இலங்கை மக்கள் விரும்பவில்லை என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து வெளியாகும் வர்த்தக சஞ்சிகையான எல்.எம்.டி என்னும் சஞ்சிகையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.இலங்கை ஓர் சுயாதீன நாடு எனவும், விசாரணைகளை உள்ளக ரீதியாக நடத்தப்பட வேண்டுமெனவும் மக்கள் விரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமை நிலைமைகள் குறித்து பலம்பொருந்திய நாடுகள் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகளில் பங்கேற்ற 95 வீதமான மக்கள் சர்வதேச சுயாதீன விசாரணைகளுக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.ஆய்வில் பங்கேற்ற மூன்றில் இரண்டான மக்கள் அரசாங்கம் மனித உரிமைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.23 வீதமான மக்கள் மனித உரிமைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதனை உறுதியாக சொல்ல முடியாது என குறிப்பிட்டுள்ளனர்.எவ்வாறெனினும், அனைத்து இன மக்களும் ஒரே விதமாக நடத்தப்பட வேண்டுமென மக்கள் கருத்துவெளியிட்டுள்ளனர்.
மனித உரிமை தேவைகள் குறித்து தெளிவுபடுத்தப்பட வேண்டும் எனவும், அரசியல் தலையீடுகள் குறைக்கப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.இன மத முரண்பாடுகளை தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளனர்,

















